சீன நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி ஏற்கனவே 9 குழந்தைகளை பெற்றுள்ள நிலையில் 12 ராசிகளையும் பிரதிபலிக்கும் வகையில் இன்னும் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்குச் சீன பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்தான் டியான். இவருடைய கணவர் சாவோ வான்லாங். இவர்கள் 2008 ஆம் ஆண்டு சந்தித்து காதல் வசப்பட்டனர் . பின்னர் 2010ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் கணவர் சாவோ வான்லாங் மின்சாரம் தயாரித்து வழங்கக்கூடிய ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். மனைவி டியான் ஒரு நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஆண்டுக்கு 464 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகின்றனர்.

இவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு சீன முறைப்படி புலிகளின் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. முதல் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து அவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் 8 குழந்தைகளை பெற்றெடுத்தனர். இதில் இரண்டு இரட்டையர்களும் அடங்குவர். 2022 ஆம் ஆண்டு இவர்களது இளைய மகன் பிறந்தான். தற்போது இவர்களுக்கு ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் இருக்கின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு சீன முறைப்படி ஏழு ராசிகளும் இருக்கின்றனவாம்.
பாம்பு, குதிரை, ஆடு, முயல் மற்றும் எருது ஆகிய ராசியில் மட்டும் இன்னும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையாம். எனவே இவர்கள் அனைத்து ராசியிலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார்களாம். 9 குழந்தைகளோடு நாங்கள் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை 12 குழந்தைகள் பெற்றுக் கொள்வதே எங்களுடைய விருப்பம் என டியான் கூறியுள்ளார். என்னுடைய கணவரின் ஜீன் நல்ல ஜீனாக இருப்பதால் அதை ஏன் வீண் செய்ய வேண்டும் என டியான் ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கூடிய விரைவில் மற்றொரு குழந்தையை இவர்கள் பெற்றெடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்விருவரும் ஒரு ஆண்டுக்கு 464 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகின்றனர். 2000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டில் இவர்கள் வசிக்கின்றனர். குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு பணியாளர், ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என இவர்கள் பணியமர்த்தியுள்ளனர்.
இதே போல 12 குழந்தைகளை பெற்றெடுப்பர் என நம்புவதாக கூறிய டியான், அதற்கு ஏற்ற வகையில் தங்களின் வீட்டினை விரிவாக்கம் செய்ய போவதாக கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications