சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் படுக்கையில் படுத்துக் கொண்டு ஒரே நாளில் 300,000 யுவான் (ரூ. 35 லட்சம்) சம்பாதித்ததாக கூறியதையடுத்து வைரலாகியுள்ளார்.
சீன சந்தையில் Douyin செயலி இரண்டாவது மிகவும் பிரபலமான சமூக ஊடக வீடியோ செயலியாக விளங்கி வருகிறது. இது உலகின் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாகும். டிக்டாக்கிற்கு முன்பே டூயின் தொடங்கப்பட்டு சீனாவில் வைரலாகப் பரவியது. இந்த செயலி ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இவ்வளவு பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த செயலி மூலம், விளம்பரம் செய்வதால், பிராண்டுகள் மக்களிடையே விரைவில் பிரபலமடைக்கிறது .அதனால் சீனாவில் வளர விரும்புவோருக்கு தயாரிப்பு வெளிப்பாட்டை மேம்படுத்தும் ஒரு பிரபல செயலியாக டூயிங் விளங்கி வருகிறது.

இந்தநிலையில் தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்தவர் Gu Xixi என்ற 25வயது பெண். சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக உலா வரும் இவர், தனது வினோதமான செயல்களால் சர்ச்சைக்குரிய நபராகவும் இருந்து வருகிறார். ஜிக்ஸி ஆரம்பத்தில் ping pong பந்தை விழுங்குவது போன்ற அதிர்ச்சியூட்டும் ஸ்டண்ட்களை நிகழ்த்தி புகழ் பெற்றார். இருப்பினும், மற்றவர்களை அவமதிப்பது மற்றும் வெளிப்படையான ஆபாசமான உள்ளடக்கம்" காரணமாக இவரது பதிவுகள் இடைநீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
Gu Xixi, டூயிங் தளத்தில் 5 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்து வரும் இவர், படுக்கையில் படுத்துக் கொண்டு ஒரே நாளில் 300,000 யுவான் (ரூ. 35 லட்சம்) சம்பாதித்ததாகவும், பிப்ரவரி 8 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் கிடைத்த தனது வருமானம் என்று கூறி 1.039 கோடி யுவான் (தோராயமாக ரூ. 12 கோடி) சம்பாதித்தேன் என்றும் இதற்காக, சுமார் 27.9 லட்சம் யுவான் (தோராயமாக ரூ. 3 கோடி) கமிஷனும் பெற்றேன் என்றும் கடந்த பிப்ரவரி 17ம் தேதி பதிவிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பலரும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, மீண்டும் நேரடி ஒளிபரப்பில் தோன்றிய இளம்பெண், 300,000 யுவான்களை எளிதாக சம்பாதிப்பது பற்றிய தனது முந்தைய கருத்து, தன்னை வெறுப்பவர்களை தூண்டுவதற்காகவே என்று பதிலளித்துள்ளார். தனது அனைத்து சம்பாத்தியங்களும் "கடினமாக சம்பாதித்த பணம்" என்று விளக்கமளித்துள்ளார். மேலும், "நான் இப்போது ஏன் என் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வதில்லை தெரியுமா? நான் செய்யும் செயல் ஒவ்வொரு முறையும், ஒரு பிரச்சனை ஏற்படுத்துகிறது. இந்த முறை, அது தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது.
"நான் திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை. நான் சம்பாதிக்கும் பணம் எல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தவை. நான் நாள் முழுவதும் எதுவும் செய்யாமல் ரூ.35 லட்சம் சம்பாதித்தேன் என்று சொன்னது தன்னை வெறுப்பவர்களை எரிச்சலூட்டுவதற்காகவே என்று குறிப்பிட்டுள்ளார். South China Morning Post-ன் படி, ஒரு மாதத்தில் லட்சம் யுவான்களை சம்பாதிக்க விரும்பவில்லை என்றும் அந்த தொகையை ஒவ்வொரு நாளும் சம்பாதிப்பதே தனது குறிக்கோள் என்றும் அதற்காக தான் போராடி வருவதாகவும் அந்த பெண் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது பதிலுக்கு பொதுமக்கள் பல விமர்சனங்களைதான் பதிவிட்டு வருகின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications