சீனா: காளான்கள் உலகிலேயே மிக ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இது பெரும்பாலும் உடல் எடையைக் குறைக்க உதவும் டயட் ஃபுட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வாறு உணவுகளில் சேர்க்கப்படும் காளான்களில், சில வகை காளான்கள், உலகின் மற்ற காளான்களை விட விலை உயர்ந்தவை. அத்தகைய விலை மிகுந்த காளான் வகைகளில் ஒன்றான மாட்சுடேக் காளான் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்த வகை காளான்கள் கொரிய தீபகற்பம், சீனா மற்றும் அமெரிக்காவில் வளர்க்கப்படுகிறது. இந்த மாட்சுடேக் காளான்கள் இலையுதிர் காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியவை. மேலும், மிகுந்த சுவையுடையவை. ஜப்பானில், மாட்சுடேக் காளான்களை வளர்க்கும் இடங்கள் குறைந்து வருவதால், இந்த வகை காளான்கள் விலை உயர்ந்து வருகிறது.

மாட்சுடேக் காளான்களின் சிறப்பு அதன் வாசனையாகும். இதனுடைய வாசனை மற்றும் இறைச்சி போன்ற தன்மையின் காரணமாக அனைவராலும் விரும்பப்படுகிறது. சைவப் பிரியர்கள் சாப்பிடும் உணவுகளில் காளான்களும் ஒன்று. இந்த வகை காளான்கள் இவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாட்சுடேக் காளான்களின் விலை ஒரு பவுண்டுக்கு $500 டாலர்கள். இது இந்திய மதிப்புக்கு ரூ. 41,708 ரூபாய். மேலும், இந்த காளானின் ஒரு கிலோ விலையை கணக்கிட்டால் அது ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை இருக்கும்.
மாட்சுடேக் காளான்கள் எந்த சுவையில் இருக்கும்?: இந்த வகை காளான்களின் சுவையை விவரிக்க, மக்கள் காரம் மற்றும் லவங்கப்பட்டையின் சுவைகளைப் பற்றி விவரிக்கும் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். ஒரு டிஷ்ஷில் இந்த வகை காளான்களை சேர்க்கும்போது, மற்ற பொருட்களின் சுவையை மாற்றி அமைக்கும் விதமாக இந்த வகை காளான்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜப்பானில் மாட்சுடேக் காளான் வரத்து குறைந்து வருகிறது, ஏனெனில் அவை வளரும் காடுகள், முக்கியமாக சிவப்பு பைன் மரங்கள், பைன்வுட் நூற்புழு எனப்படும் ஆக்கிரமிப்பு புழுவால் அழிந்து வருகின்றன. இந்த புழு வட அமெரிக்காவில் இருந்து வந்து இயற்கை இடங்களை சேதப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, ஜப்பானின் மாட்சுடேக் காளான்களின் வருடாந்திர அறுவடை 1000 மெட்ரிக் டன்களுக்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
மாட்சுடேக் காளான்கள் எப்போது பயன்படுத்தப்படுகின்றன? இந்த வகை காளான்கள் வணிகங்கள் செய்யும் நபர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பருவ கால பரிசு கூடைகளில், இந்த வகை காளான்களைக் காணலாம். தாஷி, சேக், மிரின் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சுகியாகி, போன்ற உணவுகளைத் தயாரிக்க இந்த வகை காளான்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மிரின், சோயா சாஸ், சேக் மற்றும் கொம்பு டாஷி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மாட்சுடேக் கோஹான், என்னும் வேகவைத்த அரிசி உணவுகளைத் தயாரிக்க பயன்படுகிறது.
இந்த வகை காளான்கள் ஒரு தனி சுவை கொண்டவை, எனவே மக்கள் பொதுவாக சமையலில் அவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவை பெரும்பாலும் மெல்லியதாக வெட்டப்பட்டு சூடான சூப்களில் சேர்க்கப்படுகின்றன, சிலர் வேகவைத்த அரிசியுடன் பரிமாறுகின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications