சென்னை: இந்தியாவில் தற்போது காய்கறிகளை கூட நாம் குயிக் காமர்ஸ் செயலிகள் வாயிலாக ஆர்டர் செய்து வீட்டிற்கே டெலிவரி பெற முடிகிறது. அந்த வகையில் ஸெப்டோ, பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆகிய செயலிகள் வாயிலாக நாம் பால், காய்கறி, பழம் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் பெறலாம்.
அப்படி அண்மையில் ஸ்விக்கியி இன்ஸ்டாமார்ட் தளத்தில் காய்கறி ஆர்டர் செய்த நபருக்கு தான் ஆர்டர் செய்ததை விட குறைந்த எடையில் காய்கறிகள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுப்பியுள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது.

ரெடிட் தள பயனர் தான் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வாயிலாக காலிபிளவர் ஆர்டர் செய்ததாக தெரிவித்துள்ளார். செயலியில் 400 முதல் 600 கிராம் எடை கொண்ட காலிபிளவரை ஆர்டர் செய்ததாகவும் தனக்கு வந்த காலிபிளவர் வெறும் 145 கிராம் எடையுடன் தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஆர்டர் செய்த பெரும்பாலான காய்கறிகள் இப்படி குறைந்த இடையில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரத்தையும் புகைப்படத்துடன் அவர் பதிவு செய்துள்ளார் . அனைத்து காய்கறிகளுமே தான் ஆர்டர் செய்ததை விட குறைவாக இருப்பதை அறிந்து தன்னிடம் இருக்கும் எடை இயந்திரம் கொண்டு வெயிட் போட்டு பார்த்துள்ளார்.
அதில் தான் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஆர்டர் செய்ததாகவும் அதற்கு 965 கிராம் உருளைக்கிழங்கு மட்டுமே தனக்கு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். 250 கிராம் கேப்ஸிகம் ஆர்டர் செய்த தனக்கு 170 கிராம் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 1.8 கிராம் எடை கொண்ட காய்கறிகளை தான் ஆர்டர் செய்து 1.2 கிராம் எடை கொண்ட காய்கறிகளை மட்டுமே டெலிவரி பெற்றேன் என அவர் புகார் கூறியுள்ளார். அவர் இது தொடர்பாக ஸ்விக்கியின் கஸ்டமர் சப்போர்ட்டை அணுகிய போது தனக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தான் செலுத்திய தான் 177 ரூபாயை முழுமையாக தனக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும் அவர் கஸ்டமர் சப்போர்டிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் 89 ரூபாயை மட்டுமே திரும்ப வழங்க முடியும் என கூறினார்களாம். தொடர்ந்து அவர்களிடம் தான் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவின் கீழ் பலரும் தாங்களும் இப்படி தான் ஏமாற்றப்பட்டோம் ஆனால் ஸ்விக்கி தரப்பில் சரியாக பதில் அளிக்கவில்லை என்றும் முறையாக பணத்தை திரும்ப வழங்க வில்லை என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications