டெல்லி: இந்தியாவில் கூடிய விரைவில் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளன. இது தான் ஒரு டெக் வல்லுநருக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சேர்ந்த ஒரு டெக் வல்லுநர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற டொமைனை வாங்கி இருப்பதாகவும் அதனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் என்ற டொமைனை வாங்கி வைத்திருக்கிறார். கூடிய விரைவில் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளங்கள் ஒன்றாக இணைய இருக்கின்றன. இருப்பினும் இந்த இரண்டு செயலிகளும் இணைந்த பிறகு எந்த பெயரில் இது அறியப்படும் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் அறியப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் சந்தாதாரர்கள் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது இரண்டு நிறுவனங்களுமே அதிக சந்தாதாரர்களை கொண்டு செயல்படுகின்றன.
இந்த இரண்டு தளங்களையும் இணைக்கும் போது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பொதுவான பெயரில் இனி ஜியோ சினிமா ,டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலிகள் இருக்கும் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் டெல்லியை சேர்ந்த ஒரு மொபைல் ஆப் டெவலப்பர் ஜியோ ஹாட்ஸ்டார் என்ற டொமைன் பெயரை வாங்கி தன் பெயரில் சொந்தமாக்கி வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவெடுத்து இருப்பதாக கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஹாட்ஸ்டார் தளம் இந்தியாவில் தனது பயனர்களை இழந்து வருவதை அறிந்தேன் என்றும் கூடிய விரைவில் அவர்கள் ஜியோ உடன் இணைய இருப்பதையும் தெரிந்து கொண்டு இது தொடர்பான டொமைன்களை நான் தேடி வாங்கி வைத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் பெயர் வேண்டும் என்றால் ரிலையன்ஸ் நிறுவனம் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதனை நான் அவர்களுக்கு 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அந்த தொகையை கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த மொபைல் ஆப் டெவலப்பருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த டொமைனை விற்று வரும் பணத்தை கல்விக்காக பயன்படுத்துகிறார் எனும் போது அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் இதனை பயன்படுத்தி கொள்ளலாமே என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அம்பானிக்கு சொந்தமான வியாகாம்18 நிறுவனமும் , டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும் இணைந்து தற்போது கூட்டு நிறுவனமாக மாறியுள்ளன. நவம்பர் மாதத்திற்குள் இது தொடர்பான ஒழுங்குமுறை அனுமதிகள் அனைத்தும் கிடைத்து விடும். இதன் பிறகு இந்தியாவிலேயே மிகப்பெரிய மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனமாக இந்த கூட்டு நிறுவனம் இருக்கும். இதன் மதிப்பு 8.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
புதிய திருப்பம்:
ரிலையன்ஸ் ஹாட்ஸ்டார் டொமைனுக்கு தொடர்புடைய சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸின் துணைத் தலைவர் அம்புஜேஷ் யாதவ், 93,345 பவுண்டுகள் (இந்திய ரூபாயில் சுமார் 95 லட்சம்) கோரி ஒரு கோரிக்கையை மறுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக ரிலையன்ஸ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையால் ரிலையன்ஸ் ஹாட்ஸ்டார் டொமைன் விவகாரம் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications