அரசு வேலைக்கு சென்றுவிட வேண்டும், குறிப்பாக மத்திய அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது தான் பெரும்பாலான இந்தியர்களின் கனவு. பெற்றோரே கூட பிள்ளைகளை அதற்காக தான் ஊக்குவிப்பார்கள். சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் ஆக , ஐபிஎஸ் ஆக வேண்டும் என நம்மில் பெரும்பாலானவர்கள் கூட கூறி இருப்போம்.
ஆனால் கால ஓட்டத்தில் சிலர் அதில் இருந்து திசை மாறி வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இருப்பினும் எந்த கஷ்டம் வந்தாலும் மன உறுதியோடும் விடா முயற்சியோடும் தான் நினைத்த படி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிமிடம் கூட படித்து கொண்டு தான் இருப்பார்கள். அப்படி ஒரு இளைஞர் தான் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி இருக்கிறார்.

இந்தியாவில் போட்டித் தேர்வுகளிலேயே மிகக் கடினமான மற்றும் மிக முக்கியமானது யுபிஎஸ்சி தேர்வுகள். இதன் மூலம் தான் ஒருவர் மத்திய அரசு பணிகளில் சேர முடியும். ஆனால் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது அத்தனை எளிய காரியமல்ல. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் படிக்க வேண்டியது இருக்கும.
இதற்காக பயிற்சி வகுப்புகளில் சேர்வது, கிடைத்த நேரங்களில் எல்லாம் படிப்பது என அவர்கள் படிப்பிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தால் மட்டுமே வெல்ல முடியும். இந்த நிலையில் ஸோமேட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யக்கூடிய ஒரு இளைஞர் சாலையில் போக்குவரத்து நெரிசலின் போது கிடைத்த சில நிமிட இடைவேளையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.
உணவு டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த நபர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கிறார். இந்த நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காக, தன்னுடைய வாகனத்தின் முன் பகுதியில் மொபைல் போனை வைத்துவிட்டு அந்த இளைஞர் சிக்னலில் வாகனங்களுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது யுபிஎஸ்சி தேர்வுக்கான வகுப்புகளை கவனித்துள்ளார்.
இதனை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த இளைஞரின் கடின உழைப்பையும் யுபிஎஸ்சி கனவுக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி வழங்கி வரும் ஆயுஷ் என்பவர் அந்த இளைஞரின் வீடியோவை பார்த்துவிட்டு கடினமாக உழைப்பை செலுத்தி படிப்பதற்கு இதை விட வேறு எதுவும் ஊக்கமளிக்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் இவரை முன் உதாரணமாக எடுத்து கொள்வதாகவும் பலர் பதிவிட்டுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications