2025 ஆம் ஆண்டின் மிக மோசமான ஒரு விமான விபத்தாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து பார்க்கப்படுகிறது. அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பயணிகள் 10 விமான பணியாளர்கள் 2 விமானிகள் இருந்தனர், விபத்தில் ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்தனர் . இந்த விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்திருப்பது கேட்போரை கலங்க வைத்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதிக் ஜோஷி என்பவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் வசித்து வரக்கூடிய பிரதிக் ஜோஷி ஒரு மென்பொருள் பொறியாளர். தன்னுடைய குடும்பத்தை லண்டனில் செட்டில் செய்து விட வேண்டும் என்பதற்காக இத்தனை காலம் திட்டமிட்டு கடினமாக உழைத்து பணம் சேர்த்து வைத்து தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை லண்டனுக்கு அழைத்துச் செல்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.
பிரதிக் ஜோஷியின் மனைவி கோமி வியாஸ் ஒரு மருத்துவர். ராஜஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் . கணவரோடு லண்டனில் செட்டில் ஆகலாம் என்ற ஆசையோடு கோமி வியாஸ் இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய மருத்துவர் பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கணவன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் லண்டனில் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என கனவுகளோடு நேற்றைய தினம் ஏர் இந்தியா விமானத்தில் ஏறி இருக்கின்றனர். விமானம் ஏறியவுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. அந்த புகைப்படத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். ஆனால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த ஐந்து பெயரின் வாழ்க்கையும் முடிந்து முடிந்து விட்டது.
இந்த விமான விபத்தில் ஐந்து பேருமே உயிரிழந்திருக்கின்றனர். இவர்களுடைய இந்த செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவும் சாம்பலாகி போனது குறித்து பலரும் தங்களின் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். குடும்பத்தோடு லண்டனில் சேர்ந்து வாழ போகிறோம், இனி வீடியோ காலில் குழந்தைகளை பார்த்து பேச வேண்டிய தேவை இல்லை என எண்ணியிருந்த பிரதீக் ஜோஷியின் கனவு காற்றோடு கரைந்து போய்விட்டது.
இனி கணவரோடும் நம் பிள்ளைகளோடும் புதிய ஒரு நகரத்தில் புதியதாக ஒரு வாழ்க்கையை தொடங்கலாம் என எண்ணி இந்தியாவில் இருந்து தன்னுடைய வேலையை ராஜினாமா செய்த புறப்பட்ட கோமி வியாஸ் கனவு நிறைவேறாமலே போயிருக்கிறது. இனி அப்பா அம்மாவுடன் ஜாலியாக இருக்கலாம் என எண்ணி இந்த விமானத்தில் ஏறிய மூன்று குழந்தைகளும் தற்போது உயிருடன் இல்லை.


Click it and Unblock the Notifications