பெங்களூருவில் கார் ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய உரிமையாளரின் 1.5 கோடி ரூபாய் பணத்தை திருடி சென்று கோயில்களுக்கு தானமாக வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த 45 வயதானவர் ராஜேஷ். வட பெங்களூரில் வசிக்கும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக பட்டய கணக்காளராக இருக்கும் ஒரு நபருக்கு கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கடந்த மே ஐந்தாம் தேதி அந்த பட்டய கணக்காளர், ராஜேஷ் இடம் ஒரு பையை கொடுத்து அதில் 1.5 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் பத்திரமாக அதை காரில் வைக்கும் படியும் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்த பட்டய கணக்காளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே காரும் இல்லை தன்னுடைய ஓட்டுனரும் இல்லை. இதனை அடுத்து தன்னுடைய அலுவலகத்துக்கு சென்ற அவர், அங்கேயும் கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து ஓட்டுநர் ராஜேஷூக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அவர் தான் மருந்தகத்தில் மருந்து வாங்க வந்திருப்பதாகவும் 10 நிமிடங்களில் வந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அவர் திரும்ப வரவில்லை எனவே அந்த பட்டய கணக்காளர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார் . இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 9ஆம் தேதி ராஜேஷ் காவல்துறையினரிடம் சரணடைந்தா. பின்னர் காவல்துரையினர் ராஜேஷை கைது செய்தனர் இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டு இருக்கும் நபர் புகார் அளித்த நபரிடம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருபவர் எனக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய உரிமையாளரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் தப்பி ஓடிய ஓட்டுநர், காரை கொண்டு சென்று பட்டய கணக்காளரின் அலுவலகத்தில் விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில்பணத்தை திருடி சென்றாராம். பின்னர் சில கோயில்களுக்கு சென்றாராம். தான் செய்த குற்றத்தை அவர் ஒப்பு கொண்டதை அடுத்து காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் தான் திருடி சென்ற ஒன்றரை கோடி ரூபாய் பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை தன்னுடைய குடும்பத்திற்கு செலவு செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கினாராம். இதனை அடுத்து காவல்துறையினர் அவர் செலவு செய்த தொகை மற்றும் கோயில்களுக்கு தானமாக வழங்கிய தொகை போக மீதமுள்ள தொகையை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Click it and Unblock the Notifications