ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நபர் அங்கு வேலைக்கு சேர்ந்த பிறகு தனக்கு முகப்பரு வந்ததை காரணமாக கூறி வேலையை ராஜினாமா செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய நபர்கள் அங்கே நடக்கும் நிகழ்வுகளை ரெடிட் தளத்தில் பதிவு செய்வார்கள் . அந்த வகையில் ஒரு ரெடிட் பயனாளர் தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரு நபர் ஒரே மாதத்தில் அந்த வேலையை விட்டு விட்டதாகவும் அதற்கு தனக்கு முகப்பருக்கள் வந்ததே காரணம் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள இந்த செய்தியின் படி ஒரு ஆலையில் வேலை செய்யக்கூடிய நபர் ரெடிட் தளத்தில் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

இயந்திரங்களை சுத்தம் செய்யும் வேலைக்காக தன்னுடைய நிறுவனத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக ஒருவரை வேலைக்கு சேர்த்தார்கள் என்றும் தினமும் எத்தனால் போன்ற ரசாயனங்களை கொண்டு இயந்திரங்களை சுத்தம் செய்ய வேண்டிய வேலை அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு மாத காலம் பயிற்சி பெற்ற அந்த நபர் திடீரென ஒரு நாள் நான் இனி வேலைக்கு வரமாட்டேன் , இந்த வேலையால் எனக்கு உடல்நல பிரச்சினை வந்துவிட்டது என கூறியுள்ளார்.
அப்படி என்ன உடல்நல பிரச்சினை ஏற்பட்டது என கேட்டதற்கு எனக்கு முகப்பரு வந்துவிட்டது என கூறினாராம். அந்த நபர் இதற்கு முன்பு எனக்கு ஒரு முறை கூட முகப்பரு வந்ததே கிடையாது ஆனால் இங்கு வேலைக்கு சேர்ந்த பிறகு இந்த ரசாயனங்களை கையாள்வதால் எனக்கு முகப்பரு வருகிறது எனவே நான் இந்த வேலையை ராஜினாமா செய்கிறேன் என கூறி இருக்கிறாராம்.
அந்த ஊழியர் பணிக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆகியிருந்தாலும் அங்கு இருப்பவர்களிடம் தன்னுடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக புகழ்பெற்றவராக மாறியிருக்கிறார். முகப்பருவை காரணம் காட்டி அவர் வேலையை ராஜினாமா செய்தது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
ஒரு பயனர் எனக்கு கூட வேலைக்கு சேர்ந்த பிறகு தான் நரைமுடி வந்துவிட்டது நான் வேலையை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன் என கூறியுள்ளார். ஒரு பயனர், இயந்திரங்களை சுத்தம் செய்த பிறகு கைகளை கழுவ வேண்டும் என்பது கூடவா அவருக்கு தெரியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு பயனர் முகத்தில் முகப்பரு வந்துவிட்டது என்பது ஒரு சாதாரண காரணம்தான் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை அதற்கு காரணம் தேடி இருக்கிறார் எதுவும் கிடைக்காததால் தான் இதை ஒரு காரணமாக கூறியிருக்கிறார் என பதிவு செய்துள்ளார். ஒரு சிலர் பல்வேறு நிறுவனங்களில் இது போல ஊழியர்கள் நீண்டகால பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் அதை முன்கூட்டியே அறிந்து இவர் வேலையை விட்டு இருப்பது நல்ல விஷயம் தானே என கூறியிருக்கின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications