மும்பை: இந்தியாவில் திரையுலகை பொருத்தவரை நடிகர்கள் அதிக சம்பளம் வாங்க கூடியவர்களாக இருக்கின்றனர். ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் கூட சம்பளமாக பெறுகின்றனர். நடிகர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வருமானத்தைக் கொண்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்துவது ,பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வது, ரியல் எஸ்டேட் முதலீடு என பணத்தை கொண்டு பணம் சம்பாதிக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு நடிகர் கடந்த ஏழு மாதங்களாக எந்த படத்திலும் நடிக்காமலேயே 110 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்சய்குமார் இவர் கடந்த ஏழு மாதங்களாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமலேயே 110 கோடி ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறாராம்.

இது தொடர்பாக ஈடி நவ் வெளியிட்டிருக்கும் செய்தியில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதித்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது. மும்பையின் பிரதான பகுதிகளான வார்லி, போரி வாலி , லோயர் பரேல் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் அக்சய் குமார் சொந்தமாக குடியிருப்புகளை வைத்திருக்கிறார்.
வார்லி பகுதியில் 6,830 சதுர அடி பரப்பளவில் தனக்கு சொந்தமாக இருந்த ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை அக்சய் குமார் விற்பனை செய்திருக்கிறார் இதன் மூலம் மட்டும் அவருக்கு 80 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் இவருக்கு 70 சதவீத வருமானத்தை தந்து இந்த குடியிருப்பு தான் . அதே போலி போரி வாலி பகுதியில் தனக்கு சொந்தமாக இருந்த மூன்று படுக்கை அறை கொண்ட ஒரு ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்பிலை 4.25 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்.
மேலும் இரண்டு இடங்களில் தனக்கு சொந்தமாக இருந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை தலா 6.6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். இது மட்டும் இன்றி லோதா ஒன் பிளஸ் பகுதியில் தனக்கு சொந்தமாக இருந்த அலுவலக இடத்தை 8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறாராம். எனவே ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் மட்டுமே இவர் இந்த 7 மாதத்தில் 110 கோடி ரூபாயை வருமானமாக பெற்று இருக்கிறார் .
அண்மையில் தான் அக்சய்குமார் நடிப்பில் ஹவுஸ்புல் 5 திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக மாறியது. இந்த திரைப்படம் 116 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. விரைவில் பூத் பங்களா ,வெல்கம் டு தி ஜங்கிள், உள்ளிட்ட இவரது படங்கள் வெளியாக இருக்கின்றன. அக்சய் குமாரை பொறுத்தவரை 2500 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட ஒரு பாலிவுட் நடிகராக இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications