கோலாலம்பூர்: மலேசியாவை சேர்ந்த பணக்காரர்கள் பட்டியலில் இலங்கை தமிழர் ஒருவர் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மலேசிய பணக்காரர்கள் பட்டியலில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அனந்த கிருஷ்ணன் 45,339 கோடி ரூபாய் சொத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
மலேசியாவின் புகழ்பெற்ற தொழில் முனைவோராக இருக்கும் அனந்த கிருஷ்ணன் அங்கு இருப்பவர்கள் மத்தியில் ஏகே என பரவலாக அறியப்படுகிறார். தொழில் மட்டுமல்லாமல் இவர் அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.

அனந்த கிருஷ்ணனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவுக்கு குடிபெயர்ந்த பிறகு தான் அனந்த கிருஷ்ணன் பிறந்ததார். கோலாலம்பூரில் உள்ள பிரிக்ஃபீல்டு பகுதியில் பிறந்த இவர் அங்கே இருந்த தமிழ் பள்ளியில் கல்வி பயின்றார்.
பின்னர் அங்கே பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் அரசியல் அறிவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். இதன் பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்ற அவர் எம்பிஏ படித்து முடித்தார். இதன் பின்னர் மலேசியா திரும்பிய அவர் ஊடகம், தகவல் தொடர்பு, எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கால்பதித்தார்.
1980 மற்றும் 90களில் அனந்த கிருஷ்ணன் மல்டி மீடியா நிறுவனத்தை தொடங்கினார். பொழுதுபோக்கு துறையில் மலேசியாவின் குறிப்பிடத்தக்க நபராக வளர்ந்தார். பல்வேறு நேரலை இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையெல்லாம் நடத்தி புகழ் பெற்றார்.
தற்போது இவருக்கு சொந்தமாக மூன்று தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகின்றன. Usaha Tegas என்பதுதான் இவரது நிறுவனத்தின் பெயர். இந்த நிறுவனம் பல்வேறு தொலை தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறது.
ஊடகத்துறையில் புகழ்பெற்ற அஸ்ட்ரோ என்ற தொலைக்காட்சி மற்றும் பிராட் பேண்ட் சேவை வழங்கக்கூடிய மேக்சிஸ் என்பன உள்ளிட்ட நிறுவனங்களில் எல்லாம் இவரது முதலீட்டு நிறுவனம் பெருந்தொகையை முதலீடு செய்து லாபம் பார்த்துள்ளது.
அனந்த கிருஷ்ணன் தன்னுடைய வருமானத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துகிறார். YCF என்ற பெயரில் இவர் கல்வி, கலை , விளையாட்டு மற்றும் மனிதநேய நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருகிறார். 2011 ஆம் ஆண்டு இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 93 வது இடத்தை பிடித்தார்.
அப்போது இவரது சொத்து 10 பில்லியன் டாலர்களாக இருந்தது. தற்போது இவரது சொத்து மதிப்பு 5.8 பில்லியன் ஆக இருக்கிறது. இவர் கணிசமான தொகையை ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்து நஷ்டமடைந்தார். இதனால் இவரின் சொத்து மதிப்பு சரிவடைந்துவிட்டது. MAI Holdings Sdn Bhd, Exoil Trading உள்ளிட்டவை இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications