பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கை துணையை அமைத்து தர வேண்டும் என்று தான் முயற்சி செய்வார்கள். அப்படி ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு வரன் தேடுவதற்காக மூன்று லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்தி இருப்பதை பற்றி தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் திடீரென ஒருவரது பதிவுகள் பலரது கவனத்தை ஈர்க்கும் உடனடியாக அது பெரிய விவாதத்திற்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு வரன் பார்ப்பதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்ததாக வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது டிரெண்டாகியுள்ளது.

ஒரு பயனர், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், " என்னுடைய நண்பரின் தந்தை, அவரது மகளுக்கு 200 கோடிக்கும் அதிகமான வருமானம் கொண்ட குடும்பத்தில் இருந்து வரனை எதிர்பார்க்கிறார். இதற்கான வரன்களை தேடி தர 3 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி இருக்கிறார்" என பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
2.5 லட்சம் பேர் இந்த பதிவினை பார்த்துள்ளனர். பலரும் தங்களது வரன் பார்க்கும் அனுபவம், தற்போது வரன் பார்த்து தரும் துறைக்கு இருக்கும் டிமேண்ட் ஆகியவற்றை பின்னூட்டங்களாக பதிவிட்டுள்ளனர்.
200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் பெறக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த வரன் வேண்டும் என்பதற்காக 3 லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்தியிருக்கிறார் என்பதில் தவறேதும் இல்லை என்கிறார் ஒரு பயனர்.
பொதுவாக இதுபோல வரன் பார்த்து வழங்கும் ஆன்லைன் தளங்களுக்கோ அல்லது வரன் பார்த்து வழங்கும் நபர்களுக்கு மொத்த திருமண செலவில் 1 - 2% தரகாக தரவேண்டியதுதான் நடைமுறையில் உள்ள பழக்கம். அந்த வகையில் இந்த தந்தை 200 கோடிக்கும் அதிகமான சொத்துள்ள நபரை தேடுகிறார் என்றால் கண்டிப்பாக இவரும் அதிக சொத்து வைத்திருக்கும் ஒரு நபராகத்தான் இருப்பார்.
எனக்கு தெரிந்து இவர் ஒரு கோடி ரூபாய் வரை திருமணத்திற்கு செலவு செய்வதற்கு தயாராக இருப்பார் .எனவே 3 லட்சம் தரகு கட்டணம் என்பது அவருக்கு சாதாரணம் தானே என ஒரு நபர் கூறியிருக்கிறார்.பலர் பணம் பணத்தோடு தான் சேர்கிறது என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது எந்த குடும்பம், எந்த தரகு நிறுவனம் அல்லது எந்த தளம் இவ்வளவு கட்டணத்தை பெற்றது என்பன உள்ளிட்ட விவரங்கள் அதில் வெளியாகவில்லை.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications