பழ வியாபாரத்தை இப்படி கூட செய்யலாமோ? வியாபாரியின் செம டெக்னிக்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வியாபாரி தன்னுடைய பொருளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றால் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும்.

 

அந்த வகையில் பழ வியாபாரி ஒருவர் தன்னுடைய பழங்களை விற்பனை செய்வதற்காக செய்த டெக்னிக் கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பழ வியாபாரி வித்தியாசமாக பழங்களை நறுக்கி வித்தியாசமான சத்தம் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.

ரூ 1 கோடி இன்சூரன்ஸ் பணம்! தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட வியாபாரி!

பழ வியாபாரி

பழ வியாபாரி

தர்பூசணி. பப்பாளி உள்பட பல்வேறு பழங்களை விற்கும் வியாபாரி ஒருவர் தன்னுடைய அபாரமான டெக்னிக் மூலம் பழங்களை விற்பனை செய்யும் வீடியோ மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பழ வியாபாரி பழங்களை வித்தியாசமான முறையில் சத்தம் போட்டு கொண்டே வெட்டுகிறார். அவர் வெட்டும் பாணியே வித்தியாசமாக உள்ளதால் சுற்றி நிற்பவர்கள் அவரை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர்.

பொதுமக்கள் - குழந்தைகள்

பொதுமக்கள் - குழந்தைகள்

பழத்தை வெட்டி முடிந்ததும் அவர் பழங்களை இரண்டாக பிளந்து வித்தியாசமாக கத்துகிறார். மேலும் இந்த பழங்கள் நன்றாக பழுத்து விட்டது என்று அவர் கூறும் பாணியே தனியாக உள்ளது. அது மட்டுமின்றி தனது முகத்தை அஷ்ட கோணலாக்கி கொண்டு அவர் செய்யும் சேட்டைகள் சுற்றிலும் உள்ள பொது மக்களை குறிப்பாக குழந்தைகளை மிகுந்த அளவில் கவர்ந்துள்ளது.

வியாபாரியின் டெக்னிக்
 

வியாபாரியின் டெக்னிக்

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு வியாபாரி தன்னுடைய வியாபாரத்திற்காக செய்த வித்தியாசமான டெக்னிக் ஆச்சரியப்பட வைக்கிறது என்று ட்விட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்

வித்தியாசமான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உள்ள தொழிலதிபர்கள் இவரிடம் சில டெக்னிக்களை கற்று கொள்ளலாம் என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் அளித்துள்ளார். இதுபோன்ற டெக்னிக்கை எல்லா பழ வியாபாரிகளும் பயன்படுத்தலாமே என இன்னொருவர் கமெண்ட் பதிவு செய்துள்ளார்.

தனித்துவமான விற்பனை

தனித்துவமான விற்பனை

ஒரு நிமிடத்திற்கு நீளமான இந்த வீடியோவின் இருப்பிடம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் அந்த வியாபாரியை சுற்றி, அவரது பழ வண்டியைச் சுற்றி பலர் கூடி இருப்பதை காட்டுகிறது. பழ விற்பனையாளர் தனது தனித்துவமான விற்பனையை செய்து வருவதை அவரை சுற்றி நிற்பவர்கள் ரசிக்கும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்று இணையதளங்களை ஸ்தம்பித்து வருகிறது. ஏற்கனவே இதே போன்று திராட்சை விற்பனையாளர் ஒருவரின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் தற்போது பப்பாளி மற்றும் தர்பூசணி பழங்களை விற்பனை செய்யும் வீடியோ வியாபாரியின் வீடியோ வைரலாகி வருகிறது.

வெற்றி

வெற்றி

இந்த பழ வியாபாரியின் வித்தியாசமான முயற்சி காரணமாக அவரது தள்ளு வண்டியில் இருந்த மொத்த பழங்களும் ஒரு சில மணி நேரங்களில் விற்பனையாகி விட்டது என்பதுதான் அவருடைய இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A fruit seller whose passionate technic storms internet users

A fruit seller whose passionate technic storms internet users | பழ வியாபாரத்தை இப்படி கூட செய்யலாமோ? வியாபாரியின் செம டெக்னிக்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X