சென்னை: வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு வேறு வங்கிகளில் பெற்ற கடன்களைத் தங்கள் வங்கிக்கு மாற்றும் விருப்பத்தை வழங்குகின்றன. இது வீட்டுக் கடனாக இருந்தாலும் சரி, தனி நபர் கடனாக இருந்தாலும் சரி. சில சலுகைகள் மற்றும் நிபந்தனைகளுடன், ஏற்கனவே வாங்கிய கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ள முடியும். அவ்வாறு மாற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
கடன் பெறுபவர்கள் பொதுவாக வேறு வங்கிகளில் சிறந்த சலுகைகளைப் பெறும் போது, தங்கள் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது குறித்து யோசிக்கிறார்கள். இது குறைந்த வட்டி விகிதம் அல்லது அவர்களுக்கு சாதகமான விதிமுறையாகக் கூட இருக்கலாம். இதனால் கடன் பெறுபவர், ஒட்டுமொத்த கடன் சுமையை குறைப்பதாக உணர்வதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஒரு வங்கி கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றுவது எவ்வாறு செயல்படுகிறது?: நீங்கள் ஒரு வங்கியில் வாங்கிய கடனை, மற்றொரு வங்கிக்கு மாற்றும்போது உங்களுடைய பழைய கடனை செலுத்தி விட்டு மாற்ற வேண்டும். இதற்காக நீங்கள் சில கட்டணங்களையும் செலுத்த வேண்டும். மேலும் புதிய கடன் பெறுவதற்கு, புதிய வங்கிக்கு செல்லும் போது அங்குள்ள செயலாக்கக் கட்டணத்தையும் செலுத்த வேண்டி இருக்கும். இருந்தாலும், உங்களுடைய பழைய கடன் வழங்கும் வங்கியை விட, புதிய கடன் வழங்கும் வங்கி வட்டி விகிதத்தில் குறைவாக இருந்தால், நீங்கள் அந்த வங்கியினை தேர்வு செய்யலாம்.
உங்கள் கடனுக்கு நீங்கள் தற்போது, செலுத்தும் வட்டி விகிதத்தை விட வேறொரு வங்கி குறைந்த வட்டி விகிதத்தை வழங்குவதை அறிந்தால், நீங்கள் அந்த வங்கிக்கு உங்கள் கடனை மாற்றிக் கொள்ளலாம். இந்த பரிமாற்றம் உங்கள் பணத்தை சேமிக்க உதவும். ஆனால், நீங்கள் பிற வங்கிக்கு உங்கள் கடனை மாற்றும்போது, செலுத்த வேண்டிய கட்டணங்களைச் சரிவர செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.
நீங்கள் வேறு வங்கிக்கு உங்களுடைய கடனை மாற்ற நினைத்தால், அவர்கள் முதலில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சரி பார்ப்பார்கள். 750க்கு கிரெடிட் ஸ்கோர் இருந்தால் வங்கிகள், உங்களுக்கு கடன் தருவது குறித்து பரிசீலிக்கும். அதுவே, 750 கீழே இருந்தால் உங்களுக்கு கடன் தருவது சற்று அரிதுதான். எனவே கடன் பெறும்போது அதனை சரியாக நிர்வகித்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும்.
கடனை வேறு வங்கிக்கு மாற்றும் போது ஹிடன் சார்ஜஸ் இருக்கலாம். அதை உங்கள் வங்கிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி வேறு வங்கிகளுக்கு லோன்களை மாற்றுவது, ஹிடன் சார்ஜஸ் மற்றும் செயலாக்கக் கட்டணங்களுக்கு வழி வகுக்கலாம். எனவே 0.5 முதல் 1 சதவீதத்திற்க்கு மேல் வட்டியில் வித்யாசம் இருந்தால் மட்டும் லோன்களை மாற்றுவது குறித்து யோசிக்கலாம் என்று bankbazaar.com, CEO ஷெட்டி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications