இந்தியா முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில், விலைவாசி மிடில் கிளாஸ் மக்களை பந்தாடி வருகிறது. தீபாவளிக்கு மக்கள் வாங்கும் முக்கிய பொருட்கள் அனைத்தும் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது, உதாரணமாக ஆவின் நெய் 500 மிலி 365 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்ந்துள்ளது, வெண்ணெய் 60 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் சர்க்கரை, சமையல் எண்ணெய், முட்டை, கறி, ஆடைகள், இனிப்பு என அனைத்தும் உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் காஜூ கட்லி கிலோ விலை 800 ரூபாயாக உயர்ந்த நிலையில், இன்று 1200 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பணவீக்கம் என்பது சராசரியாக 5 சதவீதமாக ஒவ்வொரு வருடம் உயர்ந்து வருவதாக கூறப்படும் வேளையில் காஜூ கட்லி கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் வாங்கும், பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் பணவீக்கத்தின் தாக்கம் வித்தியப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பமும் தனது அன்றாடச் செலவுகளில் பெரிய அளவில் வித்தியாசம் ஏறபட்டு உள்ளது. அப்படி பார்த்தால் 5 ஆண்டுகளில் காஜு கட்லி விலை மாற்றத்தை பார்க்கும் CAGR அடிப்படையில் கணக்கிட்டால், சுமார் 8.45 சதவீதம் அளவில் இதன் விலை உயர்ந்துள்ளது.
மேலும் இந்த 8.45 சதவீதம் என்பது காஜு கட்லியின் பணவீக்கம் மட்டுமே ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் அல்ல.
மத்திய அரசு வெளியிடும் பணவீக்கத தரவுகள் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மாற்றங்களை உள்ளடக்கியது. சில பொருட்கள் விலை உயரலாம், சில விலை குறையலாம் அல்லது மாறாமல் இருக்கலாம்.
இதனால் நாம் பயன்படும் பொருட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பத்தின் பணவீக்க தாக்கம் ஏற்படும். ஆனால் இந்த தீபாவளிக்கு எல் நினோ, உலகளாவிய சப்ளை செயின் காரணமாக பொருட்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக சாமானிய மடில் கிளாஸ் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களின் விலை வேகமாக உயர்ந்திருக்கும் காரணத்தால் விலைவாசி உயர்வு மூலம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications