கேரளா: கேரளாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் அண்மையில் ஃபெராரி ரோமா மாடல் காரை வாங்கி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் தங்களின் செல்வந்த நிலையை காட்டுவதற்காகவே சொகுசு கார்களை வாங்குன்றனர்.
குறிப்பாக ஃபெராரி கார்களை பயன்படுத்துவது மிகப்பெரிய ஸ்டேடஸாக பார்க்கப்படுகிறது. அப்படி கேரள தொழிலதிபர் வாங்கியுள்ள ஃபெராரி ரோமா கார் தான் சொகுசு கார் பிரியர்களிடையே டிரெண்டாகியுள்ளது.

கேரளாவின் பிரபல நிறுவனமான Synthite Industries-இன் நிர்வாக இயக்குனர் விஜூ ஜேக்கப் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபெராரி ரோமா காரை வாங்கியுள்ளார்.
கேரளாவில் இந்த ரக காரை வாங்கிய முதலாவது நபர் விஜூ ஜேக்கப். சில்வர் நிறத்திலான இந்த காருடன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். கேரள மாநிலம் கொலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விஜூ ஜேக்கப் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
விஜூ ஜேக்கப்பின் உணவுப் பொருட்கள் ,மருத்துவம், ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் தொழில்களை செய்து வருகிறார். தற்போது ஃபெராரி ரோமா காரை வாங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஃபெராரி ரோமா காரை பொறுத்தவரை அண்மையில் தான் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இவர் வாங்கியுள்ள சில்வர் நிற ஃபெராரி காரின் தோற்றமே பார்ப்பதற்கு ஸ்டன்னிங் ஆக இருக்கிறது.
இந்தக் காரை பொறுத்தவரை பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளிலும், மணிக்கு 200 கிலோமீட்டர் என்று வேகத்தை வெறும் 9.3 வினாடிகளிலும் எட்டி விட முடியும். இந்தக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர் ஆகும்.
தன்னுடைய வாழ்வில் ஒரு புதிய விஷயம் சேர்க்கப்பட்டிருக்கிறது என இந்த காரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இது வெறும் கார் மட்டுமல்ல என்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையின் வெளிப்பாடு எனக் கூறியுள்ளார்.
இதன் வடிவம் மற்றும் ஈடு இணையற்ற செயல்பாடுகள் ஒவ்வொரு முறை இந்த காரை ஓட்டும்போதும் இத்தாலியில் இருப்பது போன்ற ஒரு உணர்வையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் பதிவு செய்துள்ளார்.
ஃபெராரி ரோமா காரை பொறுத்தவரை இரண்டு இருக்கை வரிசை கொண்டுள்ளது. இந்த காரில் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் இரண்டு கதவுகள் மட்டுமே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 16 அங்குலத்தில் டிஜிட்டல் கிளஸ்டர் திரை வழங்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு கிளாசிக் லுக் கொண்டிருக்கிறது. விஜூ ஜேக்கப் ஆடம்பர கார்களின் பிரியர். இவர் ஏற்கனவே Range Rover Sport, BMW M340i, BMW M2 Competition and Mercedes-Maybach GLS 600 ஆகிய கார்களை பயன்படுத்தி வருகிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications