உத்தரபிரதேசம்: உலகம் முழுவதும் புகழ்பெற்ற சிக்கன் ஃபாஸ்ட் ஃபுட் உணவகமாக கேஎஃப்சி இருக்கிறது. ஆங்கிலத்தில் இதன் விரிவாக்கமே Kentucky Fried Chicken என்பதாகும். பெயரிலேயே சிக்கனை கொண்டிருக்கிறது. பல்வேறு வகையிலான சிக்கன் உணவுகளை விற்பனை செய்கிறது இந்நிறுவனம்.
இந்தியாவில் தேவயானி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தான் கேஎஃப்சி கடைகளை நடத்தி வருகிறது. கேஎஃப்சி சிக்கன் என அழைக்கும் அளவுக்கு இங்கே விற்பனை செய்யும் சிக்கன் ஃபிரைக்கு மக்கள் அடிமை. இந்தியாவில் 1000க்கும் அதிகமான கேஎஃப்சி கடைகள் செயல்படுகின்றன. இதனிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் கேஎஃப்சி கடைகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இந்து அமைப்பினரின் போராட்டம் காரணமாக உத்தரபிரதேசத்தில் செயல்பட்டு வந்த ஒரு கேஎஃப்சி கடை திடீரென மூடப்பட்டிருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கேஎஃப்சி-க்கு சொந்தமான கடை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்து ரக்சா தல் என்ற இந்து அமைப்பினர் இந்த கடையை மூட வேண்டும் எனக் கூறி போராட்டங்களை நடத்தினர். கடைக்கு முன்பே திரண்டு அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம், ஹர ஹர மகாதேவா என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருக்கும் இந்திராபுரம் என்ற பகுதியில் கேஎஃப்சி கடை இயங்கி வந்தது. திடீரென இந்த கடைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர் இந்த கடையில் அசைவம் விற்க கூடாது என கூறினர். தற்போது இந்து நாள்காட்டியை பொறுத்தவரை ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் கன்வர் யாத்திரைக்கான காலமாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் இந்திராபுரத்தில் எந்த கடையிலும் அசைவம் விற்க கூடாது என இந்து ரக்சா தல் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேஎஃப்சி கடையினுள் நுழைந்த இந்து அமைப்பினர், அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளனர், கடையில் அசைவம் விற்கக் கூடாது சைவம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின . இதனை அடுத்து அந்த கேஎஃப்சி கடை மூடப்பட்டது.
இதே போல மற்றொரு அசைவ உணவகத்தையும் இவர்கள் மூட வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் 10 பேரை அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்து காலண்டர் படி சாவன் மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய சாவன் மாதம் ஆகஸ்ட் 9ஆம் தேதி முடிகிறது. சிவனுக்கு உகந்த இந்த மாதத்தில் வட மாநில மக்கள் கன்வர் யாத்திரை செல்வார்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications