ஒரு லட்டு விலை ரூ.24 லட்சமா.. 1 ஏக்கர் நிலத்தையே வாங்கி போட்டு விடலாமே?

என்ன சொல்றீங்க? ஒரு லட்டு விலை 24 லட்சம் ரூபாயா? இது ஒரு ஏக்கர் நிலமே வாங்கி போட்டுவிடலாம் போல் இருக்கே. அப்படி என்ன ஸ்பெஷல் எதற்காக இந்த லட்டின் விலை 24 லட்சம் ரூபாய்.

இந்தியாவில் மிக பிரபலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்..

இந்த விழாவில் பல அடி சிலைகள் வைத்து வழிபடுவதும், அதனை ஆற்றிலோ கடலிலோ? கரைப்பதும் பல நாட்கள் கொண்டாடப்படுவதும் வழக்கம்.

பாலப்பூரில் விநாயகர்

பாலப்பூரில் விநாயகர்

அப்படி ஹைத்ராபாத் நகரில் பாலாபூரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, 1994ம் ஆண்டு முதல் ஏலம் விடப்பட்டு வருகின்றது. 1994ல் முதன் முதலாக ஏலம் விடப்பட்டபோது 450 ரூபாய்க்கு விடப்பட்டது. வருடத்திற்கு வருடம் ஏலத்தில் விடப்படும் இந்த லட்டின் விலை மிக அதிகமாகவே இருக்கும்.

ஏலத்திற்கு விடப்பட்ட விலை

ஏலத்திற்கு விடப்பட்ட விலை

கடந்த 2004ல் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக ஏலம் போன இந்த லட்டின் விலையானது, 2010ல் 5.35 லட்சம் ரூபாய்க்கு மேலாக ஏலம் விடப்பட்டது. அதனை தொடர்ந்து 2011ல் 5.45 லட்சம் ரூபாயாக்கும், 2012ல் 7.50 லட்சம் ரூபாயக்கும் ஏலம் விடபடுகிறது. 2013ல் 9.26 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.

நடப்பு ஆண்டில் விலை

நடப்பு ஆண்டில் விலை

2015ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், ஆண்டுக்கு ஆண்டு லட்சக் கணக்கில் விலை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டில் 21 கிலோ எடை கொண்ட இந்த லட்டு 19.80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 24.60 லட்சம் ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏன் ஏலம்?

ஏன் ஏலம்?

இந்த லட்டினை ஏலத்தில் எடுத்து தங்கள் ஊரில் உள்ள வயல் வெளிகளில் தூவுவதால், தங்கள் ஊர் செழிப்படைவதாக மக்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டில் ஏபி எம்எல்ஏ ரமேஷ் யாதவ் இந்த லட்டினை ஏலத்தில் எடுத்தார். இந்த ஆண்டு டி ஆர் எஸ் தலைவர் வி லக்ஷ்மா ரெட்டி 24.60 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+