இந்திய தொழிற்துறையில் ஏ எம் நாயக் என்ற பெயருக்கு பின் பெரும் சக்தி உள்ளது, எல் அண்ட் டி நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். அனில் மணிபாய் நாயக் AKA ஏ எம் நாயக் சனிக்கிழமை லார்சன் & டூப்ரோ (எல்&டி) குழுமத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதன் மூலம் 23 பில்லியன் டாலர் மதிப்பிலான குழுமத்தின் அதிகாரத்தை எஸ் என் சுப்ரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது.
81 வயதான ஏ எம் நாயக் இதை தொடர்ந்து குழுமத்தின் ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளையின் தலைவராக இருப்பார். இதோடு கடந்த சில ஆண்டுகளாக அவர் மேற்கொண்டு வரும் பல்வேறு நன்கொடைகள், உதவி திட்டங்களை தொடர்ந்து கவனம் செலுத்துவார்.

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்வில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மூத்த ஊழியர்கள் மற்றும் எல்&டியின் பல முன்னாள் இயக்குநர்கள் முன்னிலையில், ஏ எம் நாயக் தனது தலைவர் பதவியை விடுத்து அதிகாரப்பூர்வமாக பதவி விலகினார்.
குஜராத் ஆசிரியர்கள் குடும்பத்தில் பிறந்த ஏ.எம்.நாயக் மும்பையில் படித்து வளர்ந்தார். 1965 மார்ச் 15 ஆம் தேதி எல் அண்ட் டி நிறுவனத்தில் பணியாற்ற துவங்கி செப்டம்பர் 30, 2023 வரையில் இதே நிறுவனத்தில் பணியாற்றினார். ஜூனியர் இன்ஜினியராக பணியில் சேர்ந்து வேகமாக பதவி உயர்வு பெற்று 2003ல் சேர்மன் ஆக உயர்ந்தார்.
ஏ எம் நாயக் புகழ் உயர முக்கியமான காரணம் எல் அண்ட் டி நிறுவனத்தை திருபாய் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குரூப் கைப்பற்ற துடித்த போது, தொழிலாளர்கள் உடன் இணைந்து எதிர்த்து நின்றது மட்டும் அல்லாமல் பெரும் வர்த்தக குழுமங்களிடம் இருந்த பங்குகளை employee welfare trust கைப்பற்றியது. இன்று வரையில் எல் அண்ட் நிறுவனம் தான் employee welfare trust அமைப்பை நிர்வாகம் செய்து வருகிறது.
ஏ எம் நாயக் வாழ்க்கையில் தொழில்துறை மற்றும் நன்கொடைகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் வேளையில், இவரை பாராட்டும் விதமாக இந்திய தபால்துறை அவர் முகம் கொண்ட தபால் தலையை அந்த விழாவில் வெளியிட்டது.

L&T இன் முன்னாள் இயக்குநர்கள் மற்றும் நாயக்கின் குடும்ப உறுப்பினர்கள் இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து ஹார்பர் காலின்ஸ் வெளியிடும் தி மேன் ஹூ பில்ட் டுமாரோ-வின் அட்டையை வெளியிட்டனர்.
ஏ எம் நாயக் பல்வேறு தொண்டு அமைப்புகளையும், நிறுவனங்களை நடத்தி வருகிறார். நாயக் தொண்டு அறக்கட்டளை கல்வி மற்றும் திறனை வளர்ப்பதில் பின்தங்கியவர்களின் மீது கவனம் செலுத்துகிறது. மானிய விலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் சேவையை அளிக்க நீராலி நினைவு மருத்துவ அறக்கட்டளை உள்ளது.
இந்த இரண்டு அறக்கட்டளைகளின் கீழ், நாயக் குஜராத் மற்றும் மும்பையில் ஐந்து மருத்துவமனைகள், ஆறு பள்ளிகள் மற்றும் மூன்று திருமண / நூல் மண்டபங்கள் கட்டியுள்ளார். மேலும் 40 பள்ளிகளைத் தத்தெடுத்து, அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் சூழலை வியப்படையும் வகையில் மேம்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications