டெல்லி: ஓவர் நைட்ல ஒபாமா ஆனவர் என கிண்டலுக்கு கூறுவார்கள் அப்படி தான் டெல்லியை சேர்ந்த ஒருவர் ஓவர் நைட்டில் லட்சாதிபதி ஆகியிருக்கிறார். ஆம், டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு அடித்துள்ள ஜாக்பாட் குறித்து தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சேகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் உங்கள் பெயரில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகள் உள்ளன, இன்று முதல் நீங்கள் லட்சாதிபதி எனக் கூறியிருக்கிறார்கள்.

இதனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அவர் அவர்களிடம் மேற்கொண்டு பேசும்போது தான் விவரமே தெரிய வந்துள்ளது. டெல்லியில் வசிக்கும் ராமுக்கு , மும்பையில் ஒரு மாமா இருந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் இறந்துவிட்டார்.
தனக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் பெயரில் இருக்கும் சொத்துகள் அனைத்தும் ராமுக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்துள்ளார்.
இதில் சொத்து மட்டுமல்லாது, அவரது பெயரில் இருந்து பங்குகளும் அடங்கும் என்பதை சேகர் இப்போது தான் அறிந்து கொண்டார். இது தொடர்பாக விகாஸ் ஜெயின் என்பவர் ராமுக்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார்.
சேகரிடம், உங்களது மாமா உங்களுக்கு அவர் பெயரில் உள்ள பங்குகள் உங்களுக்கு தான் சொந்தம் என உயில் எழுத்து விட்டு இறந்திருக்கிறார் என கூறியிருக்கிறார். இதனை எடுத்து அவர் வைத்திருந்த பங்குகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்ட போது, அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அவரது மாமாவின் பெயரில் இருந்த ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை இவரது பெயருக்கு பெற்று தந்துள்ளனர். அவரது மாமா எழுதி வைத்துள்ள ரிலையன்ஸ் குழும பங்குகளின் மூலம் இந்த நபருக்கு கிடைக்கும் தொகை 60 லட்சம் ரூபாயாகும். தற்போது அவரது ஆவணங்களை சரி பார்த்து அவரிடம் பங்குகளை ஒப்படைப்பதற்கான பணிகளை ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்டுள்ளது.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்த பின்னர் அவர்களின் சொத்துகளை வாரிசுதாரர்கள் பெறுகின்றனர். அந்த சமயங்களில் பெரும்பாலானவர்கள் பங்குச்சந்தைகளில் இருக்கும் பங்குகளை கவனத்தில் கொள்வதில்லை என்கின்றனர் வழக்கறிஞர்கள். பங்குச்சந்தைகள் மற்றும் வங்கிகளில் முதலீடு செய்திருப்பவர்கள் முறையாக தங்கள் குடும்பத்தினரிடம் இது பற்றி சொல்லி வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications