ஜெய்ப்பூர்: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. நீதா அம்பானி அணியக்கூடிய நகைகள் எப்பொழுதுமே கண்களை பறிக்கும். நீதா அம்பானி விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் ஆடம்பரமான நகைகள் நகைகளை அணிவதில் மிகவும் பிரபலமானவர்.அப்படி அண்மையில் அவர் அணிந்திருந்த ஒரு நெக்லெஸ் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது.
கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானி -நீதா அம்பானி தம்பதியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி குஜராத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த பிரமாண்ட விருந்து நிகழ்ச்சியில் உலகெங்கிலும் இருந்த வந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நீதா அம்பானி பெரிய மரகத பச்சை நிற நெக்லஸை அணிந்திருந்தார் .இது விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான மணிஷ் மல்கோத்ரா வடிவமைத்த காஞ்சிபுரம் புடவையுடன் இந்த மரகத நெக்லஸ் நீதா அம்பானிக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. இந்த படங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின. இந்த நெக்லஸின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. பெண்களின் விருப்பமான ஒரு நெக்லஸாக இது மாறி போனது.
நீதா அம்பானி அணிந்திருந்த 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத நெக்லஸின் மாதிரி வடிவம் தற்போது நமது இந்திய சந்தைகளில் கிடைக்க தொடங்கியுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு வியாபாரி நீதா அம்பானி நெக்லெஸ் விலை வெறும் 178 ரூபாய் தான் என கூறி விற்பனை செய்யக்கூடிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த வடிவத்திலான நெக்லஸில் பல்வேறு வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இருப்பினும் அந்த மரகத பச்சை நெக்லஸ் தான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே ஜெய்ப்பூரை சேர்ந்த அந்த வியாபாரி பகிர்ந்திருக்கும் வீடியோவுக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. அந்த வியாபாரியின் தொழில் உத்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக பிரபல தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு என்ன ஒரு மார்க்கெட்டிங் திறமை என பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ கிட்டத்தட்ட 3.15 மில்லியன் பார்வைகளையும், ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications