அதிக பணிச்சுமை, மன அழுத்தம், ஊழியர் மரணம் என மோசமான பணி கலாச்சாரம் குறித்து நாம் அடிக்கடி செய்திகளில் காண்கிறோம். ஆனால் இந்த முறை வித்தியாசமாக ஒரு செய்தி வந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்துவிட்டு மீதமுள்ள நேரத்தில் வீடியோ கேம் விளையாடுவதாகவும் அவருக்கு மூன்று லட்சம் டாலர்கள் ஊதியமாக கிடைப்பதாகவும் வெளியான பதிவு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
ரோனா வாங் என்ற எக்ஸ் தள பயனர் ஒருவர் ”என்னுடைய நண்பரிடம் பேசினேன் அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் ஒரு வாரத்திற்கு 15 முதல் 20 மணி நேரம் மட்டும்தான் வேலை செய்கிறார். மீதமுள்ள நேரத்தில் அவர் கேம்ஸ் விளையாடுகிறார். அவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? மூன்று லட்சம் டாலர்கள்” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளையும் ஆயிரக்கணக்கானவர்களின் பின்னூட்டங்களையும் பெற்றுள்ளது.

ஒரு பயனர் இப்படி ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்றால் என்ன தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வினவியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்த வேலைக்கு தற்போது ஆள் எடுக்கிறார்களா என கேட்டுள்ளார் ஒரு பயனர். பெரும்பாலானவர்கள் விரும்பக்கூடிய கனவு வேலை இது. வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் என்பதை கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது என ஒருவர் கூறியுள்ளார்.
நீங்கள் 20 மணி நேரம் வேலை செய்கிறீர்களா அல்லது 40 மணி நேரம் வேலை செய்கிறீர்களா என்பது முக்கியமில்லை குறிப்பிட்ட வேலையை செய்து முடித்தீர்களா என்பதுதான் முக்கியம். எவ்வளவு நேரம் அதற்காக எடுத்துக் கொண்டீர்கள் என்பதை தாண்டி வேலை முடிந்ததா என்பது தான் பார்க்க வேண்டும் என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். சில பயனாளர்கள் இந்த ஊழியரின் திறமையை பாராட்டியுள்ளனர்.
சமீபகாலமாக நிறுவனங்களில் பணிச்சுமை அதிகரித்து விட்டது, தனிப்பட்ட வாழ்க்கையை கவனிக்க கூட நேரமில்லை, உடல்நிலையை கூட கவனிக்க முடிவதில்லை என ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான உள்ளன. அண்மையில் இந்தியாவில் ஒரு இளம்பெண் பணிச்சுமை தாங்காமல் உயிரிழந்தார்.
தாய்லாந்தில் ஒரு பெண் , மருத்துவ விடுப்பு கிடைக்காததால் பணிக்கு வந்து உயிரிழந்தார். இந்நிலையில் ஆங்காங்கே சில ஊழியர்கள் இப்படி மகிழ்ச்சியான முறையில் வேலை செய்யும் தகவல் வெளியாவது ஆறுதல் அளிக்கிறது.
Written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications