இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இளம் தொழில் முனைவோர் தன்னுடைய ஸ்டார்ட் அப்பை 975 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து விட்டு தற்போது எனக்கு வருமானம் இல்லை இண்டர்ன்ஷிப் தேடி கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
மணி வைஸ் என்ற பாட்கேஸ்டில் அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. வினய் ஹையர்மேத்தின் பெற்றோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் வினய் ஹையர்மேத் இளம் தொழில் முனைவோராக இருக்கிறார். இவர் லூம் (loom) என்ற ஒரு வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான அட்லாசியான் விலை கொடுத்து வாங்கியது.

அப்போது 975 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8000 கோடி ரூபாய்க்கு லூம் நிறுவனத்தை இவர் விற்பனை செய்தார். இந்த நிறுவனத்தை விற்பனை செய்ததன் மூலம் இவருக்கு 50 லிருந்து 70 மில்லியன் டாலர்கள் கிடைத்தன. மேலும் ஆஸ்திரேலிய நிறுவனம் தொடர்ந்து இந்த நிறுவனத்திலேயே அவர் வேலையில் நீட்டிப்பதற்காக 60 மில்லியன் டாலர்களை போனஸ் தொகையாக வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் வினய் எனக்கு தற்போது வருமானம் இல்லை நான் இன்டர்ன்ஷிப் தேடிக் கொண்டிருக்கிறேன் என கூறி இருக்கிறார். நிதி ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்ற தனக்கு இந்த பாரம்பரியமான கார்ப்பரேட் தலைமை பொறுப்புகளில் அதிருப்தி ஏற்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார் தற்போது தான் ஒரு நாளைக்கு 5 லிருந்து 8 மணி நேரங்கள் இயற்பியல் படித்து கற்றுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
என்னுடைய நிறுவனத்தை விற்பனை செய்த பிறகு வாழ்க்கை மாறிவிட்டது என தெரிவித்திருக்கும் அவர் என்னிடம் தற்போது எல்லையில்லா சுதந்திரம் இருக்கிறது ஆனால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார். முன்னதாக இவர் கடந்த ஜனவரி மாதம் எழுதிய பிளாக் போஸ்டில் நான் கோடீஸ்வரன் ஆனால் வாழ்க்கையில் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என எழுதியிருந்தார்.
தற்போது இவர் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த பாட்டாஸ்டில் அவர் வெளியிட்டுள்ள தகவலின் இவர் மாதம்தோறும் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவு செய்கிறாராம். இவர் தன்னுடைய சொத்தில் 50 சதவீதத்தை ரொக்கமாக கையில் வைத்திருக்கிறார் 30 சதவீதத்தை ஈக்விட்டியில் முதலீடு செய்திருக்கிறார் 20 சதவீதம் தொகையை பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார்.
தன்னுடைய நிறுவனத்தை விற்பனை செய்த பிறகு தான் வாங்கிய ஆடம்பரமான பொருள் ஐபேட் மட்டும் தான் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications