எஸ்பிஐ ATM-ல் குரங்கின் கை வரிசை! ஆச்சர்யத்தில் டெல்லி போலீஸ்!

டெல்லி: மணி ஹைஸ்ட் என்கிற வெப் சீரிஸை நம்மில் பெரும்பாலானவர்கள் பார்த்து ரசித்து இருப்போம்.

அதில் பேராசிரியராக வரும் அல்வரோ மார்டே (Alvaro Morte) கச்சிதமாக திட்டம் தீட்டி, ராயல் மிண்ட் ஆஃப் ஸ்பெயின் மற்றும் பேங்க் ஆஃப் ஸ்பெயினை கொள்ளை அடிப்பார்.

மணி ஹைஸ்ட் ரசிகர்கள் சீசன் 5-க்காக தவம் கிடக்கிறார்கள். சரி நம் விஷயத்துக்கு வருவோம். மணி ஹைஸ்டில், எதிர்பாராத விதத்தில் கொள்ளை அடிப்பது போல, இங்கு ஏடிஎம்-ல் ஒரு எதிர்பாராத விஷயம் நடந்து இருக்கிறது.

டெல்லி

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில், சவுத் அவென்யூ என்கிற பகுதியில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத்தை ஒரு குரங்கு சேதப்படுத்தி இருக்கிறது. இதை ஏ என் ஐ செய்தி நிறுவனம், வீடியோ உடன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

குரங்கு வேலை

குரங்கு வேலை

ஏடிஎம் அறைக்கு உள்ளே வந்த குரங்கு, நேரடியாக ஏடிஎம் இயந்திரத்தின் முன் பேனலை பிடித்து இழுத்து இருக்கிறது. முன் பேனலும் குரங்கின் பலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திறந்து கொண்டது. அதன் பின் அங்கும் இங்கும் சுற்றி விட்டு குரங்கு வெளியேறுவதற்கு சில நொடிகள் முன்பு வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோவை ஆச்சர்யத்துடன் பார்த்த டெல்லி காவல் துறையினர், ஏ என் ஐ-க்கு கொடுத்து இருக்கிறார்கள்.

கமெண்ட்கள்

கமெண்ட்கள்

"மணி ஹைஸ்டின் பேராசிரியர் அல்வரோ மார்டே, இந்தியாவில் இருந்து இப்படிப்பட்ட ஐடியா வருவதை வெகுவாக பாராட்டுவார்". "மணி ஹைஸ்டின் சீசன் 5-க்கு இது சரியான கான்செஃப்டாக இருக்கும்"
"இது மணி ஹைஸ்ட் அல்ல, இது மங்கி ஹைஸ்ட்" என ட்விட்டர்வாசிகள் தங்கள் போக்கில் கமெண்ட்களை அள்ளிவிட்டு இருக்கிறார்கள்.

ஜாக்கிரதை

ஜாக்கிரதை

ஒரு குரங்குக்கு முறையாக பயிற்சி கொடுத்து, ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க முடியாது, என என்ன நிச்சயம் என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. வங்கிகளும், வங்கி நிர்வாகமும் இன்னும் உஷாராக இருக்க வேண்டும். இந்த குரங்கு ஏற்படுத்திய சேதத்தை யார் செலவில் சரி செய்வார்கள்?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+