வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா எனப்படும் தனுஷ் தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். சொந்தமாக வுண்டர்பார் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ்-ன் நிகர சொத்தைக் கேட்டால் மலைக்க வைக்கிறது.
சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்ற பன்முகத்தைத் தாண்டி இப்போது ராயன் படம் மூலம் இயக்குநராகவும் தனுஷ் உருவெடுத்துள்ளார்.
ஆடம்பரமான வாழ்க்கை முறை, விலைமதிப்பற்ற சொத்துகளைக் கொண்டுள்ள நடிகர் தனுஷ்ஷின் சொத்து பற்றி பார்க்கலாம்.

1. சென்னையில் விலை உயர்ந்த பங்களா - சென்னை போயஸ் கார்டன் அருகில் தனுஷ்ஷுக்கு விலை உயர்ந்த பங்களா உள்ளது. இதன் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
2. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் - அவரிடம் உள்ள கார் கலெக்ஷனில் முதலில் இடம் பெறுவது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார். அதன் மதிப்பு ரூ.7.95 கோடி இருக்கும்.
3. பென்ட்லி கான்டினென்டல் பிளையிங் ஸ்பர் கார்- அடுத்ததாக பென்ட்லி கான்டினென்டல் பிளையிங் ஸ்பர் கார். பிரபலங்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த காரின் விலை ரூ.3.40 கோடி ஆகும்.
4. போர்டு மஸ்டாங் ஜிடி- வேகத்துக்குப் பேர் போன் இந்த போர்டு மஸ்டாங் ஜிடி கார் நடிகர் தனுஷ்ஷிடம் உள்ளது. இதன் விலை ரூ.75 லட்சம் ஆகும்.
5. ஜாகுவார் எக்ஸ்இ கார்- அவரிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி கார்களுடன் சொகுசுக்குப் பேர் பெற்ற செடான் காரான ஜாகுவார் எக்ஸ் இயும் உள்ளது. இதன் விலை ரூ.44.98 லட்சம் ஆகும்.
நடிகர் தனுஷ்ஷின் வெற்றி அவரது திரையுலகையும் தாண்டியுள்ளது. தனுஷ்ஷின் நிகர சொத்து மதிப்பு ரூ.230 கோடி இருக்கும் எனத் தெரிகிறது. நடிப்பு, தயாரிப்பு, பிராண்டு விளம்பரங்கள் போன்ற பல வழிகளில் அவர் சம்பாதிக்கிறார். கார்கள், பங்களா என ஆடம்பரமான வாழ்க்கை முறையை பின்பற்றும் நடிகர் தனுஷ் தொடர்ந்து தனது தொழில்கள் மூலம் திட்டமிட்டு சம்பாதித்து வருகிறார். அவரது தந்தை கஸ்தூரி ராஜா ஒரு இயக்குநர். அண்ணன் செல்வராகவனும் ஒரு பிரபல இயக்குநர் ஆவார்.
தனுஷ்ஷின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக செல்வராகவன் திகழ்கிறார். சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தாலும் தேவையற்ற விஷயங்களில் பணத்தை தனுஷ் இறைப்பதில்லை.
50 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ் அதில் பெரும்பாலான படங்களை வெற்றிப்படமாக ஆக்கியுள்ளார். திரையுலகில் அவரது வளர்ச்சி அபாரமாக உள்ளது. இவரது மாஜி மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வசிக்கிறார். இந்த போயஸ் கார்டனில் தானும் ஒரு வீடு வாங்கக் கூடாதா என்று தனுஷ் வேடிக்கையாகக் கூறியுள்ளார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications