அந்த மனசு தான் கடவுள் சார்.. 1.5 வருடங்கள் கழித்து ரூ.201-ஐ திருப்பி அனுப்பிய நபர்..!

பொதுவாக இதுபோன்ற பல செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன. தனக்கு உடல் நிலை சரியில்லை. தனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை.. உங்களால் முடிந்ததை உதவி செய்யுங்கள் என பல பதிவுகளை பார்த்திருக்கலாம்.

ஏன் சிலர் அதனை பார்த்து உதவியும் கூட செய்திருக்கலாம். எனினும் இதில் எத்தனை பேர் உண்மையான நோக்கங்களுக்காக பணம் பெறுகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி இணையத்தில் வலம் வந்த ஒரு பதிவினை பற்றித் தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

1.5 வருடத்திற்கு முன்பு உதவி

1.5 வருடத்திற்கு முன்பு உதவி

லிங்கிட் இன் பக்கத்தில் கமல் சிங் என்ற நபர் ஒரு நெகிழ்வூட்டும் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நான் இன்று தெரியாத ஒரு நம்பரில் இருந்து ஆச்சரியமளிக்கும் விதமாக 201 ரூபாயினை பெற்றேன். இது மிக ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. அந்த நபருக்கு 1.5 வருடங்களுக்கு முன்பு, சமூக வலைதளத்தில் பார்த்து அவருக்கு நான் சிறு உதவியாக இந்த பணத்தினை மாற்றியிருந்தேன். பணத்தினை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால், அவர் திருப்பி அனுப்பியிருக்க மாட்டார். அவரின் நேர்மையை கண்டு நான் வியக்கிறேன்.

எதற்காக இந்த பதிவு

எதற்காக இந்த பதிவு

சிலர் இந்த பதிவினை நான் காப்பி செய்து பெயரை எடிட் செய்து லைக்குகள் கமண்ட்டுகள் பெறுவதற்காக செய்கிறேன் என கூறுகின்றனர். ஆனால் எனது போனில் அவர் பணம் அனுப்பியதற்கான பரிவர்த்தனை ஆதாரம் இருக்கிறது நான் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவன் அல்ல. இதுபோன்ற பதிவுகளை நான் ஒரு போதும் வெளியிட்டதில்லை. என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் என் இதயத்தை உருக வைத்து விட்டது. இதனை ஒரு நேர்மறையான எண்ணத்துடன் நான் பகிர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

மிக்க நன்றி

மிக்க நன்றி

அத்துடன் அவர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன் சாட்டில் கடந்த ஜூலை 7, 2021 நாளில் 201 ரூபாயினை கமல் சிங் மற்றொரு நபருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு இது என்னுடைய சிறிய உதவி. உங்கள் தாயாரை பார்த்துக் கொள்ளுங்கள் என பகிர்ந்துள்ளார். அதற்கு நன்றி கூறிய நபர், தற்போது 201 ரூபாயினை திருப்பி அனுப்பியுள்ளார். அவரிடம் உங்கள் அம்மா எப்படி இருக்கிறார் என்று கேட்டதற்கு, அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். எனது தொழிலும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆக நான் வாங்கிய பணத்தை ஒவ்வொருவருக்கும் திருப்பி அளித்துக் கொண்டுள்ளேன். நன்றி என கூறியுள்ளார்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

இந்த பதிவானது சமூக வலைதள பக்கத்தில் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பலரும் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் பணத்தை நேரிடையாக வாங்கியவர்கள் கூட, கொஞ்ச காலத்தில் மறந்து விடுகின்றனர். ஆனால் இதுபோன்ற சம்பவங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சில சமயம் இதுபோன்ற மனித நேயமுள்ள பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+