மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் குழுமம் தான் பாம்பே டையிங். பாம்பே டையிங் குழுமத்தின் தலைவராக இருக்கும் நஸ்லி வாடியா முறைகேடாக டாடா சன்ஸ் நிறுவன பங்குகளை கையகப்படுத்தி விற்பனை செய்வதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் பங்கஜ் பத்னி என்பவரால் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் நஸ்லி வாடியா முறைகேடாக டாடா சன்ஸ் குழுமத்திலிருந்து 8.69% பங்குகளை விற்பனை செய்து விட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

இந்தியாவில் இயங்கி வந்த தின்சா என்ற குழுமம் பின்னாளில் அதே பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கியது. தின்சா குழுமம் 1920களில் டாடா குழுமத்திற்கு கடன் வழங்கியது. அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் டாடா குழுமம் அதற்கு பதிலாக டாடா சன்ஸில் இருந்து 8.69% பங்குகளை வழங்கியது.
இந்நிலையில் தின்சா குடும்பம் பின்னாளில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டது. இந்நிலையில் தின்சா குழுமத்துக்கு சொந்தமான இருந்த டாடா சன்ஸ் பங்குகளை போலியான ஆவணங்களை தயாரித்து நஸ்லி வாடியா தன்னுடைய பெயருக்கு மாற்றி பின்னர் விற்பனை செய்து விட்டார் என அந்த பொதுநல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1920 களில் தின்சா குழுமத்திற்கு சொந்தமாக டாடா சன்ஸ் வழங்கிய 8.69% பங்குகள் 1970களில் வாடியா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
தின்சா அறக்கட்டளையின் இந்திய பிரிவுக்கு நஸ்லி வாடியா தலைவரான போது தான் இந்த பங்கு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு நஸ்லிவாடியா முறைகேடாக மாற்றிக் கொண்ட பங்குகளின் இன்றைய மதிப்பு 1.24 லட்சம் கோடி ரூபாய் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தின்சா அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த பங்குகள் நியூயார்க்கை சேர்ந்த இரண்டு அமெரிக்க அறக்கட்டளைகளுக்கு என எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது தவிர மலாத் பகுதியில் 1000 ஏக்கர் நிலமும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலமும் தனக்கு சொந்தமானது என கூறி வாடியா அவற்றை கையகப்படுத்திக் கொண்டார் என மனுவில் கூறப்பட்டுள்ளது. நஸ்லி வாடியா போலியான ஆவணங்களை தயாரித்து இந்த சொத்துக்களை கையகப்படுத்தி விட்டார் என பொதுநல வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது .
2003ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இந்த சொத்துகள் தனக்கு கிடைத்ததாக வாடியா குறிப்பிட்டார், ஆனால் கூறும் அந்த தேதியில் தின்சா குழும வாரிசுகளில் ஒருவர் அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு ஆணையிட்டுள்ளது. ஒருவேளை இந்த குற்றச்சாட்டு நிரூபணமானால் நஸ்லி வாடியாவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications