மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 12 ஆண்டுகளாக வேலைக்கே செல்லாமல் சம்பளம் வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பதவி உயர்வுக்காகவும் சம்பள உயர்வுக்காகவும் காவல்துறையினரின் பெயர் பட்டியல்களை தயாரித்து அவர்களின் சர்வீஸ் ரெக்கார்டுகளை ஆய்வு செய்தபோது தான் மத்திய பிரதேச காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்த அதிர்ச்சியான தகவல் தெரிய வந்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக் உபாத்யாய். கடந்த 2011ஆம் ஆண்டு இவர் காவல்துறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வான இவரை போபால் காவல்துறையினர் சாகர் காவல் துறை பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்காக அனுப்பி இருக்கின்றனர். அதே வேளையில் போபாலில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாகவும் வேலை வழங்கியுள்ளனர். பயிற்சி முடித்துவிட்டு அவர் பணிக்கு சேர வேண்டும்.

அந்த சமயத்தில் உபாத்யாய் உடன் இருந்த அனைவருமே பயிற்சிக்கு சென்ற நிலையில் இவர் மட்டும் விடுப்பு எடுத்துவிட்டு தன்னுடைய சொந்த ஊரான விதிஷாவிற்கு சென்றிருக்கிறார். மீண்டும் அவர் பயிற்சி எடுக்க வரவில்லை. இதனை அவர் தன்னுடைய உயர் அதிகாரிகளிடமும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு விடுப்பு எடுத்தது குறித்து விண்ணப்பமும் செய்யவில்லையாம். இதனை அடுத்து ஸ்பீட் போஸ்ட் வழியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என ஆவணங்களை அனுப்பி வைத்தாராம்.
காவல் துறை அதிகாரிகளும் அதனை சரி பார்க்காமலேயே அதனை ஏற்றுக் கொண்டு அவர் தனியாக சென்று சாகரில் பயிற்சி பெற்று கொண்டு பணியில் சேரலாம் என அனுமதி வழங்கியுள்ளனர். அந்த காவலரோ பயிற்சிக்கும் செல்லவில்லை, வேலையிலும் சேரவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவர் வேலைக்கு செல்ல வில்லையாம். ஆனால் அவருக்கு 12 ஆண்டு காலம் சம்பளம் மட்டும் மாதம் தோறும் சென்றிருக்கிறது.
நான் வேலையில் சேரவில்லை , விடுப்பில் இருக்கிறேன் என எந்த ஒரு தகவலையும் அவர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே இல்லையாம். அவரை ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் உயரதிகாரிகளும் அவர் அங்கே சென்று பணியில் சேர்ந்து இருப்பார் என நினைத்து விட்டு விட்டார்களாம். தற்போது பதவி உயர்வு ஊதிய உயர்வுக்கான பட்டியலை தயாரித்த போது அனைவரின் சர்வீஸ் ரெக்கார்டுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
அப்பொழுதுதான் இப்படி ஒரு நபரே இந்த காவல் நிலையத்தில் வேலையில் இல்லை எந்த வழக்கிலும் விசாரணை நடத்தியதாக பதிவுகள் எதுவும் இல்லை என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் 25 லிருந்து 35 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றிருக்கிறார். இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அவரை நேரில் சென்று பார்த்த போது "அவர் எனக்கு இந்த சிஸ்டம் எப்படி செயல்படுகிறது என்பது புரியவில்லை தீவிரமான விபத்தில் நான் சிக்கினேன், என்னுடைய காலில் மெட்டல் ராட் வைத்திருக்கிறார்கள் என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் எனக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன நான் மனரீதியாக வேலைக்கு செல்லும் சூழலில் இல்லை சிகிச்சையில் இருக்கிறேன்" என பதில் அளித்தாராம்.
காவல்துறையினர் அவரை எச்சரித்துவிட்டு வாங்கிய சம்பளத்தை திரும்ப வழங்கி விடுமாறு கூறியிருக்கின்றனர் . அந்த நபர் தவணை முறையில் நான் வாங்கிய சம்பளத்தை திரும்ப செலுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறாராம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications