பொதுவாக ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும், வலிகளைக் கொடுக்கும் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். ட்விட்டர் அத்தகைய வலியைத் தான் ட்விட்டர் பல ஊழியர்களுக்கும் கொடுத்துள்ளது.
ஆனால் இந்த சோதனையான காலகட்டத்திலும் ட்விட்டர் ஊழியர் ஒருவர் செய்த காரியம், பலரின் மத்தியிலும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பணி நீக்கம்
ட்விட்டரின் யாஷ் அகர்வால் என்ற 25 வயதான ஊழியர் ஒருவர், தான் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு, தனது புகைப்படத்தை ட்விட்டரில் ஒரு பதிவினையும் பதிவிட்டுள்ளார்.
நீங்கள் வேலை செய்த இடத்தை காதலியுங்கள், ட்விட்டரை நேசிக்கவும் என பதிவிட்டுள்ளார்.
என்ன ட்வீட் அது?
இது குறித்த அவரின் ட்விட்டர் பதிவில் இப்போது தான் பணி நீக்கம் செய்யப்பட்டேன்
பேர்டு
ஆப், இது ஒரு முழுமையான மரியாதை
இந்த குழுவின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய பாக்கியம்
இது கலாச்சாரத்திற்கு சல்யூட் எனவும் பதிவிட்டுள்ளார்
#LoveWhereYouWorked #LoveTwitter என்ற ஹேஸ்டேக்கினையும் பதிவிட்டுள்ளார்.
வைரலான போஸ்ட்
யாஸின் இந்த ட்விட்டர் போஸ்ட் ஆனது தற்போது வைரலாகி வருகின்றது. ட்விட்டரில் இது பல பயனர்களிடமிருந்து பதிவினைக் பெற்றுள்ளது. வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்வது மிக அரிது. நீங்கள் தேர்தெடுக்கும் எல்லாவற்றிலும் இணையற்ற வெற்றியையும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும், உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என ஒரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு உற்சாகமா?
மற்றொரு பயனர் இவ்வளவு ஆற்றலுடன் உற்சாகத்துடனும் பணி நீக்கம் செய்யப்பட்ட ட்வீட்டை ஒரு போதும் பார்த்ததில்லை அல்லது படித்ததில்லை. உங்களுக்கு நல்வாழ்த்துகள் மற்றும் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
என்ன பணி?
யாஸ் அகர்வாலின் லிங்கிட் சுயவிவரத்தின் படி, யாஸ் அகர்வால் ட்விட்டர் இந்தியாவின் தெற்காசியாவிற்கான பொதுக் கொள்கை அசோசியேட்டாக பணிபுரிந்தார்.
அவர் கடந்த 2 ஆண்டுகளாக வெளி கூட்டாண்மை, மாநில அரசுகள், மத்திய அமைச்சர்கள், சிவில் சொசைட்டி/NGOs, தேர்தல்களை சுற்றியுள்ள XFN முயற்சிகள் உள்ளிட்ட பல பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications