அமெரிக்காவில் எந்தவித ஆவணங்களும் இன்றி முறைகேடாக தங்கி இருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு கைது செய்து மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மூன்று விமானங்கள் அமெரிக்காவில் இருந்த இந்தியர்களை அழைத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறது.
இவ்வாறு நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மோசமான முறையில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் நவதிப் சிங் என்ற இளைஞர் கடந்த எட்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்போர் மாவட்டத்தின் தன்வாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் காஷ்மீர் சிங். இவருடைய மகனான நவதிப் சிங் கடந்த எட்டு மாதங்களில் இரண்டு முறை முறைகேடாக அமெரிக்காவுக்கு செல்ல முயற்சி செய்து மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இவருடைய குடும்பம் எப்படியாவது இவரை அமெரிக்காவினுள் அனுப்பி விட வேண்டும் என்பதற்காக இதுவரை 55 லட்சம் ரூபாயை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் தரன்வாலா கிராமத்தில் காஷ்மீர் சிங் என்பவர்ட் ஒரு சிறிய இனிப்பு கடையை நடத்தி வருகிறார். அவருடைய இளைய மகன் தான் நவதிப் சிங். இவர் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவ்வப்போது தந்தையுடன் வந்து கடைக்கு இனிப்புகளை தயார் செய்வது விற்பனை செய்வது என உதவி செய்து வந்துள்ளார்.
நவதீப் சிங்கினை எப்படியாவது அமெரிக்காவிற்கு அனுப்பி வேலைக்கு சேர்த்து விட வேண்டும் என்பது அவரது குடும்பத்தினரின் கனவு. அவரை அமெரிக்காவிற்கு அனுப்பி விட வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தும், கடன் வாங்கியும் கடந்த ஆண்டு சுமார் 40 லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது.
சில முகவர்கள் அவரிடம் பணத்தை வாங்கி கொண்டு முறைகேடாக ஆவணங்கள் இன்றி எல்லை வழியே அமெரிக்கா அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் அமெரிக்கா சென்றடைந்த சில நாட்களிலேயே பனாமா நகரில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனை அடுத்து தாயகம் திரும்பிய நவதீப் சிங் மீண்டும் சில டிராவல் ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு 15 லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்காவிற்கு சென்று உள்ளார்.
ஆனால் அமெரிக்காவுக்கு சென்ற சில வாரங்களிலேயே அதாவது ஜனவரி 27ஆம் தேதி அளவில் கைது செய்யப்பட்டு விட்டார். அதன் பிறகு அவருடைய குடும்பத்தினரால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் தான் அவருடைய குடும்பத்தினருக்கு நவதீப் சிங் அமெரிக்க காவல்துறையினர் கைது செய்யப்பட்டு இருப்பதும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட இருப்பதும் தெரியவந்தது. அமெரிக்க கனவு கறைந்து போனதுடன் கடனாளியாகவும் அந்த குடும்பம் தற்போது தவிக்கிறது.


Click it and Unblock the Notifications