மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டுக்கு திருமணம் முடிந்து ஓராண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. இது ஒரு திருமண நிகழ்வாக மட்டுமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு நிகழ்வாகவும் மாறியது.
அம்பானி குடும்ப திருமணம்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாக பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளும் திருமண வரவேற்பும் நடந்தது. இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக உலக பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்கு வருகை தந்தனர். திரையுலக பிரபலங்களை தாண்டி தொழில்துறையில் கோலோச்சும் பலரும் இதற்காக இந்தியா வந்தனர்.

பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிய நிகழ்வு: ஆனந்த் அம்பானி திருமணம் முடிந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டது உலகமே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த ஒரு திருமணமாக இது மாறி இருந்தது. ஆனந்த் அம்பானியின் திருமணம் வெறும் திருமண நிகழ்வாக மட்டும் அமையவில்லை பொருளாதார ரீதியாக பல தரப்பட்ட துறைகளுக்கும் பல தரப்பட்ட மக்களுக்கும் நீண்ட கால நோக்கில் தொழில் சார்ந்த வாய்ப்புகளையும் பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.
நாட்டிற்கே முன்னுரிமை: முகேஷ் அம்பானியின் குடும்பத்தை பொறுத்தவரை நாட்டிற்கே முன்னுரிமை என்பது தான் அவர்களின் முதல் இலக்கு. இது அவர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் எதிரொலிக்கும். நாட்டிற்கே முன்னுரிமை என்கிற அம்பானியின் மனப்பான்மை தான் இந்தியாவை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மாற்றி, உலக அரங்கில் நிலை நிறுத்த செய்துள்ளது. தொழில்மயமாக்கல், வேலைவாய்ப்பு உருவாக்கம், டிஜிட்டல் மேம்பாடு , நீடித்த நிலைத்தன்மை மற்றும் மக்கள் நலப்பணிகள் என பலதுறைகளிலும் அம்பானியின் பங்கு அளப்பறியது.
வேலைவாய்ப்பு உருவாக்கம்: நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பல்வேறு துறைகளை மேம்படுத்தியதிலும் முகேஷ் அம்பானியின் பங்கு மிக முக்கியமானது. பல்வேறு துறைகளிலும் இவருடைய முயற்சிகள் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல் நவீன தேவைக்கேற்ற திறன்களை கொண்ட ஊழியர்களாக அவர்களை மாற்றியதிலும் அம்பானிக்கு முக்கிய பங்கு உள்ளது.
பல துறைகளில் விரிவாக்கம்: பெட்ரோல் கெமிக்கல், தொலை தொடர்பு, ஊடகம், ரீடெய்ல் வணிகம் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்ததன் மூலம் அம்பானி லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார் . இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளது . அம்பானியின் இந்த பங்களிப்பு வெறும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தோடு மற்றும் நின்றுவிடவில்லை திறன் மிக்க ஊழியர்கள் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கும் ஒரு காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.
திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்: அம்பானியின் தொழில்கள் பல துறைகளிலும் விரிவடைந்து இருக்கிறது என்பதால் பல துறைகளிலும் திறன்மிக்க ஊழியர்களையும் அது உருவாக்கியிருக்கிறது . தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நபர்களுக்கு சமகால தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ப தொடர்ந்து பயிற்சி தருவது , புதிய புதிய விஷயங்களை கற்றுத் தருவது , வேலை வாய்ப்பு ரீதியாக மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது என்பதில் உறுதியாக இருக்கிறது அம்பானி குழுமத்துக்கு உட்பட்ட நிறுவனங்கள்.

கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் உள்ள இடைவெளி: சமகாலத்தில் தேவைப்படும் திறன்களை கொண்ட நபர்களை உருவாக்குவதில் அம்பானியின் திறன் மேம்பாட்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கல்விக்கும் வேலை வாய்ப்பு இருக்கும் இடைவெளியை குறைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. நவீன பணியிடங்களில் தேவைப்படும் திறன்களை வளர்ப்பது புதிய புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பயிற்சி வழங்குவது என தன்னிடம் வேலை செய்யும் ஆட்கள் போட்டி திறன்களை எதிர்கொள்ளும் வகையில் திறமையானவர்களாகவும் அடுத்தடுத்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள்.
கிராமங்களிலும் கவனம்: நகரங்களில் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் சமமான வேலை வாய்ப்பும் கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முகேஷ் அம்பானி. இதற்காக கிராமப்புறங்களிலும் பயிற்சி மையங்கள் நிறுவி அங்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் , மாணவ மாணவிகள் புதிய தொழில்நுட்பங்களையும் திறன்களையும் கற்றுக் கொள்வதை உறுதி செய்கிறார்.
பெண்கள் மேம்பாட்டிற்கு முன்னுரிமை: தங்கள் பணி இடங்களில் பெண்களின் மேம்பாட்டில் அம்பானி குழும நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இவருடைய நிறுவனம் பணி சார்ந்த கொள்கைகளை வைத்திருக்கிறது. நெகிழ்வு தன்மை கொண்ட வேலை நேரங்கள், பேறு கால பலன்கள் மற்றும் பெண்களுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தலைமைத்துவத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை பெண்களுக்கு சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்கின்றன. அம்பானி குழும நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்த முயற்சிகளின் வெற்றிக்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம்.
தொழில்துறைக்கே முன் உதாரணம்: அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பணிச் சூழல் என்பதன் மூலம் கார்ப்பரேட் உலகில் பாலின சமத்துவத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் இவர். ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் முன்னோடியாக இருக்கிறார். தங்களுடைய தொழில்களாகட்டும் தங்களுடைய தயாரிப்புகளாகட்டும் அனைத்திலும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதை உறுதிப்படுத்துகிறார். இந்த தொலைநோக்குப் பார்வை அவருடைய நிறுவனம் மட்டுமில்லாமல் இந்தியாவை சேர்ந்த மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரமே வலுவடைகிறது: புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ளும் போக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு ஆற்றுகிறது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நம்முடைய தொழில்களும் வணிகங்களும் மாற்றம் அடைகின்றன. எனவே அந்த தொழில்நுட்பங்களில் திறன்மிகு நிபுணர்கள் பணிக்கு தேவைப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக முகேஷ் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வேலை வாய்ப்பு உருவாக்கம் ,திறன் மேம்பாடு ,பாலின சமத்துவம், தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது என தொடர்ச்சியாக தேசத்தில் பாசிடிவான மாற்றத்தை உண்டாக்குகிறது. இவருடைய பங்களிப்பு தனிநபர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாகவே நாட்டின் பொருளாதாரத்தையே வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications