டெல்லி: இந்திய நிறுவனங்கள் அதிகளவில் ஹேக்கர்களால் இலக்கு வைக்கப்படுவதாக ஒர் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதுவும் எந்த அளவுக்கு எனில், வாரத்தில் ஒரு இந்திய நிறுவனத்தின் மீது 1565 முறை தாக்குதல் நடத்தப்படுகிறதாம்.
இது கடந்த ஆறு மாதத்தில் ஒரு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சராசரியான தாக்குதலாம்.
உலகளவில் கூட ஒரு நிறுவனத்தின் மீது சராசரியாக 474 முறைதான் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்திய நிறுவனங்களின் மீதான இலக்கு மிக அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.
இணையம் வழியாக பரவும் ஹேக்கர்கள்
இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக் பாயின்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் 93 சதவிகிதம் தீங்கிழைக்கும் வைரஸ்கள் இணையம் வழியாக பரவுவதாக இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது உலகளவில் 35% தீங்கிழைக்கும் வைரஸ்கள் உடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமாகும்.
எளிதாக இந்திய நிறுவனங்கள் பாதிப்பு
இந்தியாவில் மிகவும் பொதுவான பாதிப்பு என்பது தகவல்களை சுரண்டும் ஒரு வகையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் Check Point's 2020 என்ற இந்த அறிக்கையில், 64% நிறுவனங்கள் மிக எளிதாக இந்த ஹேக்கர் மூலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக எக்ஸ்எம்ரிக் மூலம் 17% நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சைபர் கிரைம் அமைப்புகள் இதை துரிதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது 2020ம் ஆண்டிலும் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.
உங்களது தகவல்கள் திருட்டு
அதிலும் இந்த இணைய மோசடிகளில் மால்வேர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக இது வைரஸ் என்று அழைக்கப்படும். மால்வேர் என்பது உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய ஒன்றாகும். இவை நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டர்களில் இருந்து மெயில், வங்கி கணக்குகள் குறித்த தகவல்களை திருடுவது ஆகும்.
பாட்நெட் மூலம் தகவல் திருட்டு
இதே பாட்நெட் மூலம் உலகளவில் 28% நிறுவனங்கள் பாட்நெட் செயல்பாட்டால் பாதிகப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது 50% அதிகம் என்றும் கூறப்படுகிறது. சரி அதென்ன பாட்நெட். இதுவும் ஒரு வைரஸ் தான். இந்த வைரஸ் தான் பற்றிக் கொண்டுள்ள கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம் உட்பட அனைத்து பர்சனல் தகவல்களையும் திருடி, இதனைத் தயாரித்து அனுப்பிய ஹேக்கர்களின் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும். பாட்நெட் என்பது இந்த வைரஸ் பரவி உள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கினைக் குறிப்பிடுகிறது. இந்த நெட்வொர்க்கை ஹேக்கர்கள் தள்ளி உள்ள ஓர் இடத்தில் தங்களின் மையக் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கையா இருங்க பாஸ்
தற்போதுள்ள நிலையில் 90% மேற்பட்ட நிறுவனங்கள் கிளவுட் சேவைகளையே பயன்படுத்துகின்றன. ஆனால் இதில் 67% பாதுகாப்பு குழுக்கள் தங்கள் கிளவுட் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் இணக்கம் ஆகியவற்றில் அவர்களின் பார்வை இல்லை என்றும் புகார் கூறுகின்றன. ஆக நிறுவனங்களாகட்டும்,தனி நபர்களாகட்டும் இணைய திருட்டுகளில் இருந்து தங்களை பாதுகொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications