மும்பை: ஒலிம்பிக்கில் நாட்டிற்காக விளையாடிய வீரர் மும்பையில் ஓலாவின் வாடகை கார் ஓட்டுநராக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் ஆரியன் சிங் குஷ்வா, இவர் ஓலா வாடகை காரில் பயணம் செய்துள்ளார் .
அப்போது தான் அவருடைய கார் ஓட்டுநர் பராக் பாட்டீல் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஆரியன் சிங் குஷ்வா தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்மையில் மும்பையில் ஓலா வாடகை காரில் பயணம் செய்தேன், என்னுடைய ஓலா கார் ஓட்டுநர் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் விளையாடியவர் என தெரிந்தது.

டிரிபிள் ஜம்பில் இவர் போட்டியில் ஆசியாவிலேயே இரண்டாவது இடமும், லாங் ஜம்ப் போட்டியில் ஆசியாவிலேயே மூன்றாவது இடமும் பெற்றவர். ஒவ்வொரு முறை சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடிய போது அவர் பதக்கத்தோடு தான் நாடு திரும்பி இருக்கிறார் .
இதுவரை அவர் 2 தங்கம், 11 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை இந்தியாவிற்காக வென்று வந்திருக்கிறார் .ஆனால் தற்போது வறுமையில் வாழக்கூடிய வாடகை கார் ஓட்டுநராக செயல்பட்டு வருகிறார்.
வறுமை காரணமாக தன்னால் தடகள வீரராக தொடர முடியவில்லை எனக் கூறினாராம். யாரேனும் முடிந்தால் இவருக்கு உதவி செய்யுங்கள் நிச்சயமாக இவர் இந்தியாவுக்காக தங்கம் வென்று வருவார் என அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். அதில் பாட்டில் உடன் தான் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு பலரின் பார்வையை பெற்றுள்ளது. இது போல நாட்டுக்காக விளையாடி தங்கம் வென்ற வீரர்களை நம் நாடு ஏன் இப்படி கைவிட்டு விடுகிறது என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
பாட்டிலின் சாதனையை பலரும் பாராட்டு உள்ளனர் இந்த மனிதருக்கு இந்த சமூகம் நிறைய செய்ய வேண்டும் ஏன் பல தடகள வீரர்களின் வாழ்க்கை இப்படி முடிந்து விடுகிறது என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார் . இந்தியா ஏன் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியாமல் தவிக்கிறது என்பது இந்த ஒரு பதிவின் மூலமே நாம் தெரிந்து கொள்ளலாம், இந்தியாவில் திறமையான வீரர்களின் நிலைமை இது தான் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
போதிய அங்கீகாரம் இல்லாதது, அரசு சார்பில் ஆதரவு கிடைக்காமல் போவது ஆகியவையே இது போன்ற திறமை மிக்க நபர்கள் வாழ்வில் ஜொலிக்காமல் இருப்பதற்கு காரணம் என ஒரு பயனர் கூறியுள்ளார். இந்தியாவில் இன்ஃப்ளுயன்சர்களுக்கு என மேலாண்மை முகவர்கள் இருக்கின்றனர் ஆனால் இது போன்ற திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு என யாருமே இல்லை என ஒரு பயனர் கவலை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications