செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோ எடிட் செய்யும் செயலியை உருவாக்கிய ஒரு நபர் மாதந்தோறும் 8.4 கோடி சம்பாதிப்பதாக வெளியிட்டு இருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது.
ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் ஹிதேஷ் சவுத்ரி. இவர் யூடியூப்பில் புகழ்பெற்றவராக இருக்கிறார். இவர் அண்மையில் எளிமையான ஒரு போட்டோ எடிட்டிங் செயலியை உருவாக்கியதாகவும் அதன் மூலம் தான் ஒரு மாதத்தில் 8.4 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய எகஸ் பக்கத்தில் இது தொடர்பாக தெரிவித்திருக்கும் அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு நான் ஒரு எளிமையான போட்டோ எடிட்டிங் செயலியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைத்தேன் என கூறியுள்ளார்.
தற்போது அந்த செயலி தனக்கு பெருமளவில் வருமானம் ஈட்டி தருகிறது எனக் கூறியுள்ளார். தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற சிம்பிளான செயலிகளின் தேவை அதிகரித்துள்ளது என்பதை நான் தற்போது உணர்ந்து இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மிகவும் பேஸிக்கான இந்த போட்டோ எடிட்டிங் செயலியை தான் உருவாக்கி இருப்பதாக கூறி இருக்கும் அவர் இந்த போட்டோ எடிட்டிங் செயலி மூலம் பேக்ரவுண்டை ரிமூவ் செய்வது எழுத்துக்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட அடிப்படை வேலைகளை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயலியை நான் தயாரித்து வழங்கி மூன்று மாதங்களே ஆகிறது. ஆனால் தற்போது எனக்கு மாதந்தோறும் இதன் மூலம் பத்தாயிரம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8.4 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தான் பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது இதுபோன்ற தொழில்நுட்பம் சாராத மக்களுக்கான செயலிகளின் தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர் தான் செயலியை மட்டுமே உருவாக்கியதாகும் தன்னுடைய நண்பரின் வாயிலாக வாட்ஸ் அப் குழுக்களில் இதனை பகிர்ந்து தற்போது பெரிய அளவில் லாபம் ஈட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தொழில்நுட்பம் அல்லாத மக்களுக்கான இது போன்ற செயலிகளுக்கு தேவை அதிகமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications