பெங்களூரு: காலையில் எழுவது வேலைக்கு செல்வது, மாலை வீடு திரும்புவது, போன் பார்ப்பது, வார இறுதி நாட்களில் வெளியில் செல்வது என வாழ்க்கை ஒரு ரொட்டீனாக மாறி வருகிறது. இதனால் நாம் சின்ன சின்ன மகிழ்ச்சிகளை அனுபவிக்க தவறுகிறோம்.
தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் வேலை கிடைப்பவர்கள் அந்த வேலையிலேயே அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு ஏற்றபடி தங்களுடைய வாழ்க்கை நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆனால் நன்றாக வாழ்வது என்பது உண்மையில் என்ன என்பதை பலரும் மறந்து விடுகிறோம். அண்மையில் பெங்களுருவை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர் இது தொடர்பாக வெளியிட்டிருந்த சமூக வலைத்தள பதிவு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவில் தான் பெங்களூருவில் ஒரு பெரிய தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் ஒரு வீட்டினை வாடகை கேட்டு தங்கி இருப்பதாகவும் கூறுகிறார். அந்த வீட்டின் வாடகையாக 25 ஆயிரம் ரூபாய் இவர் வாடகையாக வழங்குகிறார் .
அது தவிர பராமரிப்புக்காக 10000 ரூபாய், உணவு சமைத்து வழங்குபவர்களுக்கு 8000 ரூபாய், மற்ற வேலைகளுக்கு 4000 ரூபாய் என அவர் செலவிடுகிறார். அது தவிர டென்னிஸ் கோச்சிங்கிற்காக 3 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் அவர் செலவு செய்கிறார்.
இவ்வாறு தான் சம்பாதிக்கும் பணமும் பெரும்பாலும் இது போன்ற வாழ்க்கை சம்பந்தப்பட்ட செலவினங்களுக்கு சென்று விடுகிறது என கூறியுள்ளார். இப்படி ஒரு வாழ்க்கை நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத் தான் நான் இத்தனை காலம் கடினமாக உழைத்தேன். ஆனால் இப்போது எனக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது நம்முடைய வாழ்க்கையை முறையை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமா அல்லது அவை நம்மை கட்டுக்குள் வைத்திருக்கின்றனவா?.
சௌகரியம் என்ற கருத்தாக்கத்தினுள் சென்று நாம் அனைவரும் சிக்கி கொண்டு இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். சமைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பன உள்ளிட்டவற்றை மறந்தே போய்விட்டேன், இதற்கெல்லாம் தற்போது ஆள் வைத்திருக்கிறேன். இதையெல்லாம் செய்யாமல் எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது ஆனால் அதை நான் எதற்காக செலவிடுகிறேன் என்று பார்த்தால் உண்மையில் ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார்.
நம்முடைய நேரத்தையும் நம்முடைய பணத்தையும் எதற்காக செலவிடுகிறோம் என்பதையே நாம் கவனிக்க தவறிவிட்டோமோ என்று எண்ணம் தோன்றுகிறது என அவர் தெரிவித்துள்ளார் .இது தவிர மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தால் மட்டுமே பெங்களூரு போன்ற நகரில் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியும் இதற்காக நான் தினமும் ஓட வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்தாக்கங்களை வெளியிட்டுள்ளனர். குழந்தையாக இருக்கும்போது ஒரு பாக்கெட் சிப்ஸ் வாங்குவதே கூட கடினமானதாக இருந்து தற்போது ஒவ்வொரு வேலை உணவிற்கும் அதை வாங்கக்கூடிய சௌகரியமும் பணமும் நம்மிடம் இருக்கிறது ஆனால் அதன் மதிப்பு போய்விட்டது என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். பலரும் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என பதில் அளித்துள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications