பைத்தான்-க்கு நன்றி.. ஒரேயொரு போட்டோ.. ஓவர்நைட்டில் பேமஸ்..!

ஐஐடி கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் தன்னுடைய கனவு இல்லத்தின் புகைப்படத்தை பதிவு செய்து அதற்கு தான் கற்றுக் கொண்ட பைத்தான் ப்ரோக்ராமிங் மொழியே காரணம் எனக் கூறி நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது.

ஐஐடி கரக்ப்பூரில் பட்டப்படிப்பை முடித்தவர் தான் அனிமேஷ் சவுகான். இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய புதிய வீட்டின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த படத்துடன் தேங்க்யூ பைத்தான் என குறிப்பிட்டுள்ளார்.

பைத்தான்-க்கு நன்றி.. ஒரேயொரு போட்டோ.. ஓவர்நைட்டில் பேமஸ்..!

மென்பொருள் பொறியாளராக ஜே பி மார்கன் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தான் அனிமேஷ் சவுகான். இவர், தான் கற்றுக் கொண்ட பைத்தான் மொழியே தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துக்களையும் சிலர் விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர்.

ஒரு பயனர் உங்களின் தாத்தா மற்றும் அப்பாவுக்கும் நன்றி கூறுங்கள். உங்களின் இந்த நிலைக்கு குடும்பத்தினரும் தானே காரணம் என தெரிவித்துள்ளார். இது பைத்தான் மொழி கற்றுக் கொண்டதால் உங்களுக்கு கிடைத்த செல்வமல்ல பரம்பரை பரம்பரையாக உங்களுடைய கைக்கு வந்த செல்வம் அதில் நீங்கள் வீடு கட்டி இருக்கிறீர்கள் என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில் பலரும் அவருடைய இந்த முன்னேற்றத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அடுத்தடுத்த வளர்ச்சியை நீங்கள் அடைய வேண்டும் என ஒருவர் வாழ்த்து கூறியுள்ளார். ஒருவர் உங்களின் வளர்ச்சி மற்றவர்களுக்கும் முன் உதாரணமாக இருக்கும் மென்மேலும் வளருங்கள் என கூறியுள்ளார்.

பைத்தான்-க்கு நன்றி.. ஒரேயொரு போட்டோ.. ஓவர்நைட்டில் பேமஸ்..!

பைத்தான் ப்ரோக்ராமிங் மொழி என்பது தற்போது பரவலாக மென்பொருள் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு மொழியாக இருக்கிறது. ஒரு இணையதளத்தை வடிவமைப்பதற்கும், மென்பொருளை உருவாக்குவதற்கும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், சில குறிப்பிட்ட செயல்பாடுகளை தானியங்கி செயல்பாடுகளாக மாற்றுவதற்கும் பைத்தான் மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது இது கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையானது என சொல்லப்படுகிறது.

எனவே மென்பொருள் துறையில் இருக்கும் பலரும் இந்த மொழியை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. சமகாலத்தில் ஐடி துறை செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் ஆகியவை நல்ல வளர்ச்சியில் இருக்கின்றன. எனவே இந்த துறைகளில் நிபுணத்துவம் பெற நினைப்போர் பைத்தான் உள்ளிட்ட நிரல் மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+