முருங்கை விவசாயத்தில் கலக்கும் விஞ்ஞானி! முருங்கை மரத்தை வைத்தே லட்சத்தில் லாபம் ஈட்டி சாதனை!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மண் விஞ்ஞானியாக 7 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் சரவணன் கந்தசாமி அந்த வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தை செய்ய முடிவெடுத்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சரவணன் கந்தசாமி விவசாய ஆராய்ச்சியை விட்டு விட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு எந்த சிரமமும் ஏற்படவி்ல்லை.

விவசாயம் எனது குடும்பத் தொழில். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மண் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோதும் எனக்குள் இருந்த விவசாய உணர்வு அடங்கவில்லை என்று கூறும் சரவணன் கந்தசாமி மண் அறிவியல் மற்றும் விவசாய வேதியலில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார்.

முருங்கை விவசாயத்தில் கலக்கும் விஞ்ஞானி! முருங்கை மரத்தை வைத்தே லட்சத்தில் லாபம் ஈட்டி சாதனை!

20 ஆண்டுகளாக மண் விஞ்ஞானியாக அவர் பணியாற்றியுள்ளார். அவரது குடும்பம் முருங்கை மரச் சாகுபடியை செய்து வந்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் உள்ள சோமன்கோட்டை கிராமம்தான் சரவணனின் சொந்த ஊர். 2017-இல் என் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பண்ணையில் வேலை பார்க்கத் தொடங்கினேன்.

முருங்கை மரம் வளர்த்து முருங்கைக்காய் சாகுபடி செய்தேன் என்று சரவணன் கூறினார். முருங்கைக்காய்கள் நீளமாகவும் இளசாகவும் மரத்தில் காய்த்தன. முருங்கை ஒரு குறுகிய கால, விரைவில் வளரக்கூடிய பசுமையான மரமாகும். முருங்கை இலையும் காய்களும் மருத்துவ குணம் நிறைந்தவை.

Story written by: Jayachandran

சரவணனின் பண்ணையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை முருங்கை இலை பறிக்கப்பட்டது. நிறைய முருங்கைக் காய்கள் அறுவடையானதால் அதன் விலை குறைவாக இருக்கும். ஆனால் முருங்கை இலைகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும்.

அதிலும் சர்வதேச சந்தையில் முருங்கை இலைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதைத் தொடர்ந்து முருங்கை இலை சாகுபடியில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சரவணன்.
2022-இல் உலக அளவில் முருங்கைக்கு 9.5 பில்லியன் டாலர் சந்தை இருந்தது. உலகத் தேவையில் 80 சதவீதம் இந்தியாவில் இருந்து பெறப்பட்டது.

முருங்கை இலையை பறித்தவுடன் அதை உடனடியாக உலர வைக்க வேண்டும். உதிரி இலைகளை கொண்டு செல்ல அதிக செலவு பிடிக்கும். இதனால் வெளிநாட்டு வியாபாரிகள் அதை பவுடராக்கி வாங்கிச் செல்வர்.

எங்களது குடும்பம் ஒரு ஏக்கரில் முருங்கையை சாகுபடி செய்தது. பின்னர் அதை மூன்று ஏக்கருக்கு விரிவுபடுத்தினோம் என்று கூறும் சரவணன் முருங்கை விதைகளை தோட்டக்கலைக் கல்லூரியில் இருந்து விலைக்கு வாங்கி வந்து தனது தோட்டத்தில் விதைத்தார்.

ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் ஆறு அடி இடைவெளி விட்டு விதைத்தார். இப்படி ஒரு ஏக்கருக்கு 2000 செடிகள் நடப்பட்டன. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முருங்கை விளைந்தது.

செடி நட்டபின்னர் 70 செ.மீ. உயரத்துக்கு வந்தவுடன் அதை பிளந்து விடுவார்கள். அப்போதுதான் செடியில் நிறைய கிளைகள் விடும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலைகளை பறிப்பார்கள்.

சரவணன் தனது தோட்டத்தில் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தினார். இயற்கை விவசாயத்தில் செடிகள் ஆரோக்கியமாக வளர அவர் இலை உரத்தையும் கடலைப் புண்ணாக்கையும் உரமாகப் பயன்படுத்தினார்.
சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தியதால் செடியின் வேர் வரை தண்ணீர் சென்று வீணாகாமல் பயன்படுத்தப்பட்டது.

முருங்கை இலையை உலர வைத்து பின்னர் அரைத்து பவுடராக்கினார் சரவணன். ஆர்கானிக் முருங்கை இலை பவுடர் சிறந்த சத்துணவு சப்ளிமென்டாக இருப்பதால் அதன் விலை ஒரு கிலோ ரூ.7000 முதல் ரூ.8000 வரை விலைக்குப் போனது.

முருங்கை இலை பவுடர் மட்டுமல்லாமல் முருங்கை பருப்புப்பொடி, முருங்கை இலை சூப்பையும் அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்தார். முருங்கை இலையில் பருப்பு, விதைகள், மசாலா சேர்த்து பொடி தயாரித்து விற்கப்பட்டது.

சரவணனின் ஆலையில் முருங்கை இலைகள் உலர வைக்கப்பட்டன. அவற்றை அவர் சூரிய ஒளியில் உலர விடுவதில்லை. இதற்காக அவர் பண்டில் மல்ச்சிங் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினார். மல்ச்சிங் என்பது உலர்ந்த இலைகளின் மேல் ஒரு படலமாக இலைகள் அல்லது பிளாஸ்டிக்கை பரப்பி ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஆகும். இதனால் தளைகள் முளைக்காது.

பண்டில் மல்ச்சிங் செய்வதால் செடியின் ஆரோக்கியம் அதிகரித்து விளைச்சலும் அதிகரிக்கும். அத்துடன் தளைகள் வளர்வது தடுக்கப்படும். ஆர்கானிக் கார்பன் உற்பத்தி அதிகரிக்கும்.

சரவணன் தனது நிலத்தில் ஏரை பயன்படுத்துவதில்லை. ஏர் பயன்படுத்தினால் நிலம் பாழ்படும். முருங்கை மட்டுமல்லாமல் மூன்று ஏக்கரில் தென்னை மற்றும் இரண்டு ஏக்கரில் பப்பாளியையும் சரவணன் சாகுபடி செய்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+