நம் நாட்டில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் மிகவும் திண்டாடி வருகின்றனர். படித்த இளைஞர்கள் தங்களது கல்வி தகுதிக்கு குறைந்த வேலைகள் கிடைத்தால் கூட இந்த வேலையாவது கிடைத்ததே என்று வேலை செய்கின்றனர்.
உதாரணமாக, 100 இடங்கள் மட்டுமே காலியாக உள்ள பியூன் வேலைக்கு பிஎச்டி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் மற்றும் 3,000 என்ஜினீயர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த செய்தி மூலம் இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையின் அவலநிலையை வெளிப்படுத்துகிறது. மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இது நமக்கு உணர்த்துகிறது.

Image: Ai created
மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்று வேலைவாய்ப்பு தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இந்த சா்வேயில் 5,149 பேர் பங்கேற்று பதிலளித்தனர். அவர்களில் 51.7 சதவீதம் பேர் வேலையின்மை வளர்ச்சி இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் பொருளாதார எந்திரம் இயங்குகிறது, ஆனால் அது தனது பணியாளர்களின் லட்சியங்களை தக்கவைக்க போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதை இந்த சர்வே தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.
எதிர்வரும் பட்ஜெட்டில் வளங்களை ஒதுக்குவது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்தவர்களில் 43.2 சதவீதம் பேர் வேலைவைாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவது மிக அவசரமான தேவை என அவர்கள் கருதினர்.
Deloitte India நிறுவனத்தின் ஆனந்த்தோரப் கோஷ் கூறுகையில், முதலாவது உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் அதிக அரசு முதலீடு இருப்பதை உறுதி செய்வதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இரண்டாவது, பயிற்சியில் தொழில்துறை தலைமையிலான தலையீடுகள் வாயிலாக தனிநபர்களின் அதிக வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
பயிற்சி திட்டங்களில் அதிக செலவினங்களை ஊக்குவிக்கும் கவனம் செலுத்தப்பட்ட வரி சலுகைகள் மூலம் தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கப்படலாம் என்று தெரிவித்தார். 1997 முதல் 2023 வரை, இந்தியாவின் மக்கள் தொகை நன்மை தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் 0.7 சதவீதம் பங்களித்தது. ஆனால் இந்த நன்மை தற்போது குறைந்து வருகிறது.
இது 2050ம் ஆண்டுக்குள் 0.2 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வயதானவருக்கு வேலை செய்யும் வயதுடையவர்களின் இடையிலான விகிதம் 1997ல் 10:1ஆக இருந்தது. அப்போது ஒரு வயதானவர் இருந்தால் 10 வேலை செய்யும் வயதுடைய நபர்கள் இருந்தனர். இது 2050 4.6:1ஆகவும். 2100ல் 1.9:1ஆகவும் குறையும். இது பொது நிதி மற்றும் குடும்பங்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நம் நாட்டில் தொழிலாளர் உற்பத்தி திறன் ஒரு மணி நேரத்துக்கு 9 டாலராக மட்டுமே உள்ளது. அதேசமயம், அதிக வருமானம் உள்ள நாடுகளில் தொழிலாளர் உற்பத்தி திறன் மணிக்கு 60 டாலராக உள்ளது. புதுமை, முதலீடு மற்றும் தொழில்நுட்ப தத்தெடுப்பு ஆகியவை முன்னேற ஒரு வழியை வழங்கினாலும், இவற்றுக்கு முறையான மாற்றங்களும் நேரமும் தேவை.


Click it and Unblock the Notifications