புனே: இந்தியாவின் முன்னனி ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2% பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இதனால் ஊழியர்கள் பலரும் நிறுவனத்தின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் புனேவில் அலுவலகத்திற்கு வெளியே நடைபாதையில் ஒரு டிசிஎஸ் ஊழியர் படுத்துறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசிஎஸ் மீது புகார்: டிசிஎஸ் நிறுவனம் பலரை வேலைக்கு தேர்வு செய்துவிட்டு இன்னும் பணி வழங்காமல் இருக்கிறது என அண்மையில் ஒரு புகார் வந்தது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தனக்கு 4 மாத சம்பளத்தை வழங்கவில்லை என புனே அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடைபாதையில் உறங்கிய ஊழியர்: சௌரப் மோர் என்ற ஊழியர் புனே டிசிஎஸ் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திடீரென ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று அலுவலக கட்டடத்திற்கு வெளியே நடைபாதையிலேயே படுத்து உறங்கியுள்ளார். இதற்கான காரணத்தையும் ஒரு கடிதமாக எழுதி அருகிலேயே வைத்திருக்கிறார். அதில் எனக்கு சம்பளம் வழங்காததால் நடைபாதையில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
என்ன காரணம்: நான் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் இங்கே எனக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறியுள்ளார். என்னுடைய ஹெச்.ஆரிடம் என்னுடைய சம்பளத்தை வழங்குங்கள் என்னிடம் பணம் இல்லை என தொடர்ந்து நான் கூறி வந்தேன். ஜூலை 31ஆம் தேதி சம்பளம் வந்துவிடும் என கூறினார்கள் ஆனால் இதுவரை வரவில்லை என தெரிவித்துள்ள அவர், என்னிடம் பணம் இல்லை நான் நடைபாதையில் தங்க போகிறேன் என ஏற்கனவே ஹெச்.ஆருக்கு தெரிவித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
வைரலான படம்: ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று அவர் beingpunekarofficial என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசிஎஸ் ஊழியர் வெளியே நடைபாதையில் படுத்திருக்க கூடிய புகைப்படமும் அவர் கைப்பட எழுதிய கடிதமும் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றது . இந்த சூழலில் இந்துஸ்தான் டைம்ஸுக்கு டிசிஎஸ் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்துள்ளது.
டிசிஎஸ் விளக்கம்: சௌரப் மோர் என்ற அந்த ஊழியர் நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாமல் திடீரென விடுப்பு எடுத்து கொண்டதாகவும் மீண்டும் வந்து பணியில் சேராமல் தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைப்படி ஒரு ஊழியர் நிறுவன அங்கீகாரம் இல்லாமல் விடுப்பு எடுத்தால் அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் அதன்படி தான் இவரது சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டது என கூறியுள்ளது. இது நிறுவனத்தின் வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும் அந்த ஊழியரை அழைத்து பேசி இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications