பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரில் பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரில் வசிக்கக்கூடிய ஐடி ஊழியர்கள் , ஸ்டார்ட் அப் ஊழியர்கள் அவ்வப்போது பெங்களூருவில் தங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். அவற்றில் சில வைரலாகும் சில விஷயங்கள் தனித்துவமானதாக இருக்கும்.
அப்படித்தான் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கிறது. பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரக்கூடிய அந்த பெண் வழக்கம் போல ஊபரில் வாடகைக்கு காரை புக் செய்திருக்கிறார். வாடகை காரும் வந்திருக்கிறது, காரில் ஏறி ஓடிபி கூறிய போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஓட்டுநர் இருக்கையில் இருந்தது அவருடைய நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் ஒரு நபர் .

டீம் லீடராக வேலை பார்க்கும் நீங்கள் ஏன் வாடகை கார் ஓட்டுகிறீர்கள் என அவர் கேட்டதற்கு எனக்கு பணி நேரம் போக போர் அடிக்கிறது அதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவே ஊபரில் ஓட்டுநராக வேலை செய்கிறேன் என கூறினாராம். இதனை தன்னுடைய நண்பருக்கு அந்த பெண் ஊழியர் வாட்ஸ் அப் வழியாக பகிர்ந்திருக்கிறார். இந்த ஸ்க்ரீன்ஷாட்டை அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் .இது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.
ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பதிவினை பார்த்திருக்கின்றனர் பலரும் இந்த பதிவுக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். ஒரு பயனர் எதிர்பாராததை வழங்கக்கூடியது தான் பெங்களூரு நகரம் என பதிவு செய்திருக்கிறார், ஒரு பயனர் பெங்களூரு வாழ் மக்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது போரடிக்கும் அளவிற்கு எல்லாம் நேரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஒரு பயனர் போக்குவரத்து நெரிசலை பார்த்து கூடவா இவர் டைம் பாஸுக்காக ஓட்டுனராக வேலை செய்கிறார் என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் .ஒரு பயனர் இதே போல தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களையும் எழுதியுள்ளனர். ஒரு நபர் கூடுதலாக பணம் கிடைப்பது நன்மை தானே என கூறியுள்ளார். பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் அது பத்தாது எனவே தான் இந்த நபர் இப்படி ஒரு வேலையை செய்கிறார் ஆனால் அதனை விட்டுக் கொடுத்த கூடாது என்பதற்காக இப்படி ஒரு காரணத்தை கூறியிருக்கிறார் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications