சமூகவலைதளங்களில் புதிய புதிய காரணங்களுக்காக டிரெண்டாகும் நபர்கள் உண்டு. அப்படி பெங்களூரை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர் டெக் நிறுவனங்களின் தலைவர்களோடு செல்ஃபி எடுத்து பதிவிடுவதன் மூலம் பிரபலம் ஆகி வருகிறார்.
மென்பொருள் பொறியாளர் பூரி அண்மையில் ஸெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்துடன் எடுத்த செல்ஃபியை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கோவாவிற்கு தான் சென்று இருந்தபோது திடீரென நிகில் காமத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் உடனடியாக அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த செல்ஃபியில் 38 வயதான நிகில் காமத் புன்னகையோடு போஸ் கொடுக்கிறார். பூரியின் இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த பதிவின் கீழ் பலரும் எப்படி அவரை எங்கு சந்தித்தீர்கள் எந்த இடத்தில் பார்த்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கோவாவில் இருக்கும் அசாகாவோ என்ற கஃபேயில் தான் நிகில் காமத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
பூரி கடந்த ஆண்டு கூட இது போன்ற ஒரு செல்ஃபியை வெளியிட்டு பிரபலமானார். கடந்த ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கூகுள் தலைமை செயல் அதிகாரியும் இந்தியாவை சேர்ந்தவருமான சுந்தர் பிச்சையை கண்டறிந்து அவருடன் செல்ஃபி எடுத்து பதிவு செய்திருந்தார்.
அப்போது சான்பிரான்சிஸ்கோ போ என்று என்னிடம் சொன்னார்கள் ஆனால் யாருமே இங்கே நாம் சுந்தர் பிச்சையை காண முடியும் என கூறவில்லை என பதிவு செய்திருந்தார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றது.
இதனிடையே பலரும் அடுத்து நீங்கள் எந்த பிரபலத்தை சந்திக்க போகிறீர்கள் பிரதமர் மோடியையா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு இல்லை தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்புதான் எனக்கு கிடைக்கிறது என பதில் அளித்துள்ளார். சில பயனாளர்கள் உங்க கண்ணுக்கு மட்டும் இவங்க எல்லாம் எப்படி தென்படுறாங்க என வினவியுள்ளனர்.
நிகில் காமத் இந்தியாவில் பெரும்பாலான சில்லறை முதலீட்டாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஸெரோதா என்ற பங்குச்சந்தை சார்ந்த வர்த்தக செயலியின் துணை நிறுவனர் ஆவார். நிகில் காமத்தின் சொத்து மதிப்பு 3.1 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தன்னுடைய சொத்தில் கணிசமான தொகையை மக்கள் நலப் பணிகளுக்காகவும் வழங்கியிருக்கிறார் .
அண்மையில் ரெயின் மேட்டர் என்ற ஒரு அறக்கட்டளைக்கு இவர் 120 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் .கடந்த ஆண்டு இவரும் இவருடைய சகோதரர் நிதின் காமத்தும் 110 கோடி ரூபாயை பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கக்கூடிய செயல்பாடுகளுக்காக வழங்கினர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications