ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் தந்த வேலையை கைவிட்டு ஃபிரெஸ்ஸராக பணிக்கு சேர்ந்த ஒரு இளைஞர், முன்பை விட தான் தற்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார்.
வேலைக்கு செல்பவர்கள் பொதுவாக அடுத்தடுத்து பதவி உயர்வு பெற வேண்டும், அதற்கு ஏற்றபடியாக ஊதிய உயர்வு பெற வேண்டும் என்று எண்ணுவது தான் வழக்கம். ஆனால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியத்தில் தான் பார்த்து வந்த வேலையை விடுத்து ஒரு நபர் ஃபிரெஸ்ஸராக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த ஒரு இளைஞர் கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சென்றார். அந்த வேலைக்கு செல்ல தொடங்கி ஓராண்டு காலம் ஆகிவிட்டது. இந்த வேலையில் தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை, ஒரே மாதிரியான வேலையாக இருக்கிறது என்பதை உணர்ந்த அவர், தனிப்பட்ட முறையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையிலான வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தாராம்.
இதனை அடுத்து தன்னுடைய வேலையை கைவிட்டு 6 மாதங்களுக்கு பின் ஒரு சிறிய நிறுவனத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஃபிரெஸ்ஸராக வேலைக்கு சேர்ந்துள்ளார். தான் இதற்கு முன்பு வாங்கிய சம்பளத்தில் பாதி சம்பளம் தான் இந்த வேலையில் கிடைக்கிறது என்றாலும் தான் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தில் தனக்கு முக்கியமான பணி வழங்கப்பட்டிருப்பதால் அதன் மூலம் தனக்கு மிகப்பெரிய பொறுப்புணர்வு தரப்பட்டுள்ளதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த சிறிய நிறுவனத்தில் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அந்த நபர் புதிதாக வேலைக்கு வரக்கூடிய இளைஞர்கள் தங்களுடைய திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
திறன்களை வளர்த்து கொள்ளாமல் எடுத்த உடனே அதிக சம்பளத்தில் வேலையில் அமருவதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். சௌகரியமான ஒரு இடத்திலேயே வேலை செய்வது நம்மை ஓரிடத்திலேயே முடக்கிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பலரும் தங்களுடைய பணி அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
சிலர் எடுத்த உடனே தங்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து அந்த வேலைக்கு சென்று அங்கே தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் தங்களுக்கும் முக்கியத்துவம் இல்லாததை உணர்ந்ததாக கூறியுள்ளனர். பின்னர் சிறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து தற்போது பெரிய அளவில் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications