கோவா: இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் வீடுகளின் வாடகை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல், காற்று மாசு என பெருநகரங்கள் மோசமான வாழ்க்கை தரத்தையே தருகின்றன.
இருந்தாலும் பெரு நகரங்களில் தான் நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதால் இதை எல்லாம் பொறுத்து கொண்டு தான் மக்கள் வாழ்கின்றனர். ஒரு சிலர் தைரியமாக முடிவெடுத்து ஊர் பகுதிகளில் செட்டிலாகிவிடுகின்றனர். அந்த வகையில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டிற்கு நொய்டா மற்றும் கோவா ஆகிய இரண்டு நகரங்களிலும் வாடகையை ஒப்பிட்டு ஒரு நபர் வெளியீட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜ் என்ற பொறியாளர் நொய்டாவில் வெப் த்ரீ ஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மூன்று படுக்கையறை கொண்ட வீட்டிற்கு 64 ஆயிரம் ரூபாயை மாத வாடகையாக செலுத்தினார். அப்படி இருந்தாலும் டெல்லியில் தொடர்ச்சியான காற்று மாசு ,மக்கள் நெருக்கம் என பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். பல ஆயிரங்களில் வாடகையை குவித்தாலும் டெல்லியில் வாழ்க்கை தரம் மோசமாக இருப்பதை உணர்ந்த அவர் தன்னுடைய வேலையை மாற்றிக் கொண்டு கோவாவிற்கு சென்று விட்டாராம்.
கோவாவில் தற்போது தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது நொய்டாவில் மக்கள் கூட்டம் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து அவர் புகைப்படத்துடன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். டெல்லி தான் பிறந்து வளர்ந்த இடமாக இருந்தாலும் காற்று மாசு பிரச்சினை தன்னை அந்த நகரத்தை விட்டு வெளியேற வைத்துவிட்டது என கூறி இருக்கு அவர் கோவாவில் ஒரு சிறிய நகர பகுதியில் நான் தற்போது வசித்து வருகிறேன் எனக் கூறியிருக்கிறார்.
டெல்லியில் கிடைத்ததை விட இங்கே அதிக வசதிகள் நிறைந்த மூன்று படுக்கையறை கொண்ட வீட்டில் வசிக்கிறேன். இதற்கு மாத வாடகையாக 19000 மட்டுமே செலுத்துகிறேன் என அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.நொய்டாவில் தன்னுடைய பால்கனியில் இருந்து கிடைத்த வியூவையும் கோவில் கிடைக்கும் வியூவையும் ஒப்பிட்டு அவர் புகைப்படத்துடன் பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
அவரது பதிவுக்கு பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர். நகரங்களில் நாம் எத்தனை லட்சங்களை குவித்து தங்கி இருந்தாலும் வாழ்க்கை தரம் மோசமாகவே இருக்கிறது என தங்களின் அனுபவத்தை பலரும் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக டெல்லியில் காற்றுமாசு பிரச்சினை உயிருக்கே குந்தகம் விளைவிப்பதாக இருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பலரும் தாங்களும் இதே போல நகரங்களை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications