பல ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்து தாயகம் திரும்பிய இளைஞர் வேலை கிடைக்காமல் தவிப்பதாக வெளியிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
12 ஆண்டு காலம் தன்னுடைய அமெரிக்க வாழ்க்கை கனவை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி இருக்கக்கூடிய ஒரு இளைஞர் தனக்கு வேலை கிடைக்கவில்லை என ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ளார். "நான் அமெரிக்காவில் இருந்து என்னுடைய வேலையை விட்டுவிட்டு நம்பிக்கையோடு இந்தியாவிற்கு திரும்பினேன் ஆனால் இங்கே நிலைமை வேறு, எனக்கு வேலை கிடைக்கவில்லை" என பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்ட படிப்பை முடித்த இவர் ஒன்பதாண்டு காலம் ஃபுல் ஸ்டேக் டெவலப்பராக வேலை செய்து இருக்கிறார். அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறோம், இந்தியா திரும்பியவுடன் நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு தான் நான் தாயகம் வந்தேன் என கூறியுள்ளார்.
தன்னுடைய வயதான பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க வாழ்க்கையை விடுத்து கடந்த மே மாதம் இவர் தாயகம் திரும்பி இருக்கிறார். தாயகம் திரும்பியவர் எப்படியும் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு பல்வேறு நிறுவனங்களுக்கும் விண்ணப்பம் செய்துள்ளார். கடந்த ஆறு மாதங்களில் இவர் பல்வேறு விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டுமே நேர்காணலுக்கு அழைத்தார்கள், அதுவும் இறுதியில் தோல்வியில் முடிந்து விட்டதாம்.
9 ஆண்டுகால பணி அனுபவம் இருக்கிறது அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறோம், அப்படி இருந்தும் இந்தியாவில் எனக்கு வேலை கிடைக்கவில்லை என கூறியுள்ளார். தற்போது வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டதாக உணர்கிறேன் என அந்த நபர் பதிவு செய்துள்ளார். அவருடைய பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும் என பலர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
உங்களுடைய பணி அனுபவம் மிகவும் மதிப்பு மிக்கது நீங்கள் தற்போதைக்கு ஃபிரீலேன்ஸ் முறையில் பணி செய்யுங்கள் என ஒரு நபர் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் எந்த மாதிரியான திறன்களை கேட்கின்றன என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி உங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும் என ஒரு பயனர் பதிவு செய்துள்ளார்.
சில வேலை வாய்ப்புகள் குறித்த லிங்குகளையும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். பலரும் நீங்கள் நெட்வொர்க்கிங் செய்யுங்கள் அதன் மூலம் பலருடைய தகவல் தொடர்பு கிடைக்கும். அது உங்களுக்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications