மும்பை: இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீட்டு வாடகைகள் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் வாடகைக்கு குடியிருப்போர் வாடகை கட்டுவதற்காகவே தனியாக வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற சூழல் உண்டாகி இருக்கிறது.
இந்த நிலையில் மும்பையில் அட்டைப் பெட்டி போல இருக்கும் ஒரு சின்ன வீட்டிற்கு 45 ஆயிரம் ரூபாய் வாடகை என வெளியாகி உள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குறுகிய கழிவறை மற்றும் கழிவறையில் அமரும் இடத்திற்கு மேலேயே வாஷிங் மெஷின் பொருத்தப்பட்டு இருப்பது தொடர்பான ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மும்பையில் இருக்கும் மற்றொரு வீட்டின் வாடகை குறித்த வீடியோ மும்பையில் வாடகை வீடுகளின் நிலவரம் குறித்த நிலையை விவரிக்கிறது. மும்பையின் மாதுங்கா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீடுதான் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ஒரு படுக்கை அறை கொண்ட வீடு தான் அது, உள்ளே நுழைந்தவுடன் ஒரு சிறிய லிவிங் ரூம் இருக்கிறது. இதனை அடுத்து ஒரு பெட்ரூம் இருக்கிறது அதில் முக்கால்வாசி இடம் கட்டிலே ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அடுத்தது சிறியதாக ஒரு சமையலறை இருக்கிறது.
இதன் பின்னர் இப்படி அட்டைப்பெட்டி போல இருக்கும் ஒரு வீட்டிற்கு மாத வாடகை 45 ஆயிரம் ரூபாய் என ரித்திக் சால்வே என்ற நபர் இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் ஓல்டு வைப் கொண்ட ஒரு படுக்கை அறை வீடு வாடகை வெறும் 45 ஆயிரம் தான் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய பின்னூட்டங்களை பதிவு செய்துள்ளனர். இவ்வளவு சிறிய குடியிருப்புக்கு 45 ஆயிரம் ரூபாய் வாடகை என்பது உங்களுக்கே ஓவராக இல்லையா என பலரும் அந்த வீட்டு உரிமையாளரை விளாசி வருகின்றனர்.
மும்பையில் வீட்டு உரிமையாளர்களுக்கு எல்லாம் என்னவானது இந்த வீட்டிற்கு போய் 45 ஆயிரம் வாடகை கேட்கிறார்களே என ஒரு நபர் பதிவு செய்துள்ளார். ஏன் 45 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள் 1 கோடி ரூபாய் கேட்கலாமே என தெரிவித்துள்ளனர். பொதுவாக மும்பையில் சாவ்ல் எனப்படும் குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பிரபலமானவை . இவை பல அடுக்குமாடிக் கொண்ட கட்டமைப்புகளாக இருக்கும் . மிக குறுகிய காரிடார்களுடன் சிறிய அறைகள் கொண்ட வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும்.
பொதுவாக 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மும்பைக்கு சென்று மில்கள் மற்றும் ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக தான் சாவ்ல் வகையிலான குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதை இத்துடன் ஒப்பிட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications