இந்தியன் ரயில்வேயில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஐஐடி இன்ஜினியரின் லிங்க்ட்இன் சுயவிவரத்தை X பயனர் த்ருவேஷ் என்பவர் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சமீபத்தில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவின்படி, அந்த நபர் தற்போது SpaceX இன் முதன்மை பொறியாளராக இருக்கிறார். அவர் பெயர் சஞ்சீவ் ஷர்மா. இவரின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில் இந்திய ரயில்வேயில் 11 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளார் எனவும், தற்போது ஸ்பேஸ்எக்ஸில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷர்மாவின் லிங்க்ட்இன் பயோ அடிப்படையில், அவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, (IIT) ரூர்க்கியில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு 1990 முதல் 2001 வரை இந்திய ரயில்வேயில் மெக்கானிக்கல் இன்ஜினியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் தொடர்ந்து கொலராடோ பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகவும், பின்னர் அவர் தொழில்நுட்ப நிர்வாகத்தில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற அமெரிக்கா திரும்புவதற்கு முன்பு ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சீகேட் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணியாற்றியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
ரயில்வேயில் தொடங்கி தற்போது விண்வெளி வரை: ஷர்மா தனது இரண்டாவது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு உலகின் முதல் பில்லியனரான எலோன் மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் டைனமிக் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார். அதில், F9-005 இலிருந்து F9-0059 வரையிலான முதல் நிலை பூஸ்டரின் மீட்பு மற்றும் மறுபயன்பாடு திறன் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். அதேபோல், காற்றியக்கவியல், GNC, உந்துவிசை மற்றும் வெப்பத்துடன் நெருக்கமாக வேலை செய்யும் கட்டமைப்பு இயக்கவியல் முயற்சிக்கு தலைமை தாங்கியுள்ளதாக அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்க்குத் திரும்புவதற்கு முன்பு அவர் ட்ரோன் நிறுவனமான மேட்டர்னெட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். அந்த நிறுவனத்தில் முதன்மை பொறியாளராகவும் பணியாற்றியுள்ளது. அத்துடன் விமான மற்றும் விண்வெளித் துறையில் பணிபுரிந்த அனுபவமிக்க பொறியியல் துறைத் தலைவராக இருந்துள்ளதாகவும் அவரது பயோவில் உள்ளது.
இந்திய மெக்கானிக்கல் இன்ஜினியரான சஞ்சீவ் ஷர்மாவின் ரெயில்-டு ஸ்பேஸ் கதை ஆனது X பயனர்களை வியப்படைய வைத்துள்ளது. பல துறைகளில் இவரது வெற்றிகரமான பயணம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
அதன்படி, எக்ஸில் இந்திய ரயில்வேயில் 11 ஆண்டுகள் பணிபுரிந்து, பின்னர் தனியார் நிறுவனத்திற்கு சென்றது பாராட்டுக்குரியது என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
ஸ்பேஸ் X இல் சேருவதற்கு முன் இவரது 20 வருட வாழ்க்கை மிகவும் பொறுமையாகத் தெரிகிறது என்று மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
இவர் 2008 ஆம் ஆண்டு முழு உலகிலும் பொருளாதார ரீதியாக மோசமான நிலையிலும் கூட பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். தற்போது இந்த லிங்க்ட்இன் பயோ சமூக வலைதளங்களில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications