பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி, தொழில்நுட்ப நகரம், ஸ்டார்ட் அப் தலைநகரம் என பெங்களூருக்கு பல்வேறு சிறப்பு பெயர்கள் இருக்கின்றன. அது அனைத்து வகையிலும் பொருத்தமானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகின்றன.
அண்மையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய ஸ்மார்ட் வாட்சில் கியூஆர் கோடினை வைத்திருக்கும் புகைப்படம் மற்றும் ஓட்டுநர் இருக்கையில் அலுவலக இருக்கையை பொருத்தி சௌகரியமாக ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர் என பல்வேறு செய்திகள் இணையதளத்தில் வலம் வந்தன.

அந்த வகையில் பெங்களூருவில் முன்னோடியாக ஒரு ஹோட்டலில் வரவேற்பு அறையில் வேலை செய்பவர் விர்ச்சுவல் முறையில் பணியாற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. டெல்லியை சேர்ந்த Entourage என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனன்யா நாரங். இவர் பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அந்த ஹோட்டலுக்கு வந்தவுடன் அங்கே பணியில் இரண்டு பாதுகாவலர்கள் மட்டுமே இருந்தனர். வரவேற்பு மேஜைக்கு சென்று பார்த்தபோது அங்கே ஆட்கள் யாரும் இல்லை அப்போதுதான் தெரிந்தது இந்த ஹோட்டலில் அனைத்தையுமே வீடியோ கான்ஃபரன்ஸ் முறையிலேயே செயல்படுத்துகின்றனர்.
அனைவரையும் வரவேற்பது, அவர்களுக்கான அறைகளை ஒதுக்கீடு செய்வது, செக் அவுட், உணவு உள்ளிட்ட பிற சேவைகளை செய்து தருவது என அனைத்தையுமே இந்த ஹோட்டல் ஊழியர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையிலேயே செய்து தருகிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த ஹோட்டலின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பணிபுரிகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
இந்த ஹோட்டலில் டிஜிட்டல் முறையில் அனைத்தையும் கையாளுகின்றனர் என தெரிவித்துள்ளார். இது தான் பெங்களூரு, இந்தியாவின் சிலிக்கான் வேலி என்பது சரியாக தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் உடனடியாக கவனத்தை ஈர்த்துவிட்டது. இந்த தொழில்நுட்ப மேம்பாட்டினை பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் சிலர் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் நேரடியாக மனிதர்களுடன் மனிதர்கள் உரையாற்றுவதில் கிடைக்கும் அனுபவம் இதில் கிடைக்காது என தெரிவித்துள்ளனர். ஒரு ஒரு பயனர் இதுதான் எதிர்காலமாக இருக்கப் போகிறது என தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் மனிதர்கள் மனிதர்களுடன் நேரடியாக உரையாடி வரவேற்பு தானே நமது பண்பாடு என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் இன்னும் சில ஆண்டுகளில் இவை அனைத்தையும் ரோபோக்களை கொண்டே செய்ய போகிறோம் அப்போது மனிதர்களுக்கான வேலை பறி போய்விடும் என கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications