சிங்கப்பூர்: போலியாக மருத்துவ ஆவணம் வழங்கி விடுப்பு எடுத்த ஊழியருக்கு 3.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அலுவலகங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் அதற்கு உரிய மருத்துவ ஆவணங்களையும் மருத்துவரின் பரிந்துரை கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். சர்வதேச அளவில் பெரும்பாலான நிறுவனங்களில் இதுதான் நடைமுறையில் இருக்கிறது.
இந்த நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த சு கின் என்ற 37 வயது பெண் ஊழியர் ஒருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மருத்துவ விடுப்பு எடுத்தது கண்டறியப்பட்டு அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3.26 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. சு கின் என்பவர் சீனாவை சேர்ந்தவர், அரசு உதவித்தொகையுடன் சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்து அங்கே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இங்கே மருத்துவ விடுப்பு கோரி போட்டோ ஷாப்பினை பயன்படுத்தி போலியாக மருத்துவ ஆவணம் தயாரித்து வழங்கியது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இதற்கு முன்பு தான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஆவணங்களை போட்டோஷாப்பில் வைத்து தேதி மற்றும் கியூ ஆர் கோடு உள்ளிட்டவற்றை மாற்றி தன்னுடைய அலுவலகத்தில் சமர்ப்பித்து மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்.
ஒன்பது நாட்கள் அவர் மருத்துவ விடுப்பு எடுத்ததாகவும் அதற்காக அவரது நிறுவனம் அவருக்கு 3500 டாலர்களை ஊதியமாக வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அவரது நிறுவனத்தின் மனித வளத்துறை ஊழியர்கள் இந்த மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்த போது தான் அது போலியான ஆவணம் என்பது கண்டறியப்பட்டது.
எனவே அவரிடம் அசல் ஆவணத்தை வழங்குமாறு கேட்டுள்ளனர். அவர் அதற்கும் போலியான ஆவணத்தை தயாரித்து தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரணையின் மூலம் கண்டறிந்த மனிதவளத்துறை ஊழியர்கள் சிங்கப்பூர் காவல்துறையினரிடம் புகார் அளித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான சு கின் போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததை ஒப்புக்கொண்டார்.
இதனிடையே அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவருடைய தாயின் உடல்நிலை மிக மோசமடைந்த நிலையில் வேறு வழியில்லாமல் பொய் கூறி விடுமுறை எடுத்ததாகவும் உணர்வு ரீதியாக எடுக்கப்பட்ட தான் இந்த செயல்களை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 3.26 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி உள்ளது. நிறுவனமும் அவரை வேலை விட்டு நீக்கியதாக தெரிகிறது. தற்போது அவர் மீண்டும் சீனாவுக்கே திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications