வேலை போச்சு.. இனி சம்பளமும் வராது.. வருத்தத்தில் வீபரீத முடிவை எடுத்த ஹரிணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையால் பல நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகின்றன. அதிலும் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டொமொபைல் துறையும், தகவல் தொழில் நுட்ப துறையும் தான்.

 

ஒரு புறம் வேலையை இழந்து தவித்து வரும் ஊழியர்கள் பலர் வேறு வேலை தேடி அலைகின்றனர்.

இவர்களில் ஒரு சிலர் இதனால் மனமுடைந்து விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அதுபோன்ற விபரீத முடிவுகளில் ஒன்று தான் ஹரிணியின் முடிவும். சில நேரங்களில் பிரச்சனையை எதிர்கொள்ள போதுமான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வேலையாகட்டும், தொழில் ஆகட்டும் அனைத்திலும் நாம் சாதிக்க முடியும்.

பொருளாதாரம்  தான் முக்கிய பிரச்சனை

பொருளாதாரம் தான் முக்கிய பிரச்சனை

இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்பட்டாலும், அதையும் சமாளித்து வருவது தானே திறமை. தகவல் தொழில் நுட்ப துறையில் இது போன்ற பணி நீக்கம் அடிக்கடி நிகழும் நிகழ்வு தான் என்றாலும், அவ்வப்போது இது போன்ற ஒருசில வீபரீத செயல்களும் இதுபோன்று நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

வேலை பறிபோனதால் தற்கொலை

வேலை பறிபோனதால் தற்கொலை

இந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஆன 24 வயதான ஹரிணி என்ற தெலுங்கானவைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். ஐடி துறையில் ஜூனியர் என்ஜினியர் ஆன இவர் கடந்த செவ்வாய் கிழமை இரவு தனது தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணி நீக்கம் குறித்த அறிக்கை
 

பணி நீக்கம் குறித்த அறிக்கை

இவர் பணி புரிந்த தனியார் நிறுவனத்தில் பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதில் நவம்பர் 30ம் தேதி தான் அவர் அந்த நிறுவனத்தில் பணி புரியும் கடைசி நாள் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட ஹரிணி மிகவும் மன அழுதத்துடன் காணப்பட்டுள்ளார். தனியாக மிக மன அழுத்ததில் இருந்த நிலையில் வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விபரீதம் வேண்டாம்

விபரீதம் வேண்டாம்

தெலுங்கானா மாநிலம், மகாபூப் நகரை சேர்ந்த இருந்த இந்த பெண், விடுதியில் இருந்தபோது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது,. எனினும் இது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் மட்டும் இன்றி இன்று பலர் தனிமையில் எடுக்கும் விபரீத முடிவுகள் இப்படி தான் உள்ளது. பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானலும் உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் அதற்காக மனிதன் உயிரோடு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A woman techie committed suicide in Hyderabad after job loss

Telangana woman techie committed suicide in Hyderabad after she lost her job.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X