பெங்களூர்: தற்போது படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது பெரும் பாடாக இருக்கிறது என ஒரு தரப்பினர் கவலைப்பட்டு வரும் நிலையில், சிலர் அதிக ஊதியத்தில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் தங்களுக்கு நிம்மதி இல்லை என புலம்பி வருகின்றனர். அப்படித்தான் ஒரு இளைஞர் ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாய் சம்பளம் தந்த வேலையை விடுத்திருப்பது தொடர்பாக தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
பரந்தாப் சவுத்திரி பெங்களூரில் செயல்பட்டு வரக்கூடிய ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் துணை தலைவராக செயல்பட்டு வந்தவர். இவருக்கு ஆண்டு ஊதியம் மட்டும் 54 லட்சம் ரூபாய். ஆனால் இவர் அண்மையில் அந்த வேலையை விடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட 7 ஆண்டு காலம் அதிக அழுத்தம் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வேலை செய்த தான், 6 மாதங்களுக்கு முன்பு வாழ்க்கையின் மிகப்பெரிய ஒரு முடிவினை எடுத்து எடுத்ததாக தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு அவர் தன்னுடைய வேலையை விடுத்து எழுத்து என்ற தன்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்தது எப்படி என லிங்குடின் பதிவில் விரிவாக தெரிவித்துள்ளார்.
"இந்த போட்டி நிறைந்த வாழ்க்கையை நான் ஆறு மாதங்களுக்கு முன்பே முடித்துக் கொண்டேன் , நான் எனக்கு பிடித்தவர்களுடன் என்னுடைய நேரத்தை செலவிட வேண்டும். அதே வேளையில் டிஜிட்டல் முறையில் மற்றும் ரிமோட் முறையில் செயல்படக்கூடிய லாபம் தரக்கூடிய ஒரு தொழிலை உருவாக்க வேண்டும் இந்த நோக்கத்தில் தான் நான் என்னுடைய வேலையை விடுத்தேன்" என கூறியுள்ளார்.
கடந்த 90 நாட்களில் நான் என்னுடைய வேலையிலேயே இருந்திருந்தால் எனக்கு சுமார் பத்து லட்சம் ரூபாய் ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் நான் தற்போது வாழும் வாழ்க்கை எனக்கு பெரிய அளவில் நிம்மதியையும் மன திருப்தியையும் தருகிறது என பதிவிட்டுள்ளார்.
எப்பொழுதுமே எழுத்தின் மீதுதான் எனக்கு ஆர்வம் எனவேதான் நான் என்னுடைய வேலையை விடுத்து இந்த 90 நாட்களும் 90 பதிவுகளை லிங்குடின் தளத்தில் வெளியிட்டேன். இவை அனைத்துமே நானே சொந்தமாக எழுதியது இதன் மூலம் எனக்கு பலரது தகவல் தொடர்புகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
நான் என்னுடைய வேலையிலேயே இருந்திருந்தால் எனக்கு சம்பளம் கிடைத்திருக்கும் ஆனால் மன நிம்மதி கிடைத்திருக்காது. 32 வயதான இவர் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவுக்கு தலைமை பொறுப்பில் இருந்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேருக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தலைமை பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு 70 மணி நேரங்கள் இவர் வேலை செய்வாராம். ஒரு கட்டத்தில் இவை எல்லாம் சலித்து போகவே சம்பளம் இல்லை என்றாலும் பரவாயில்லை என முடிவெடுத்து வேலையை தைரியமாக கைவிட்டுள்ளார். பெரும்பாலான விஷயங்களை பணத்தைக் கொண்டு வாங்கி விட முடியும் ஆனால் எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என்பதுதான் இவரது கருத்தாக இருக்கிறது.
https://www.linkedin.com/posts/parantap-chowdhury_i-left-5400000-behind-to-write-every-day-activity-7236603087967154178-U-YM?utm_source=share&utm_medium=member_desktop
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications